சத்து நிரம்பியதாகவும், எளிதில்
கிடைப்பதாலும் இது நடுத்தர
வர்க்கத்தினரிடையே நல்ல
வரவேற்பைப் பெற்றிருப்பதில்
வியப்பேதுமில்லை. ஆப்பிளைப்
போன்று வைட்டமின் ‘சி’
நிறைந்ததாகவும்,
தாதுப்பொருட்கள்
செறிந்ததாகவும்,
விலை மலிவாகவும் இருப்பதால்
எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக
இது இருக்கிறது. மேலும்
காஷ்மீரிலிருந்தோ,
இமாச்சலத்திலிருந்தோ வர
வேண்டிய கட்டாயம்
எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும்
இப்பழம் ஏறக்குறைய
ஆண்டு முழுவதும்
கிடைக்கிறது.
கொய்யா மரத்தின் தாயகம் தென்
அமெரிக்கா ஆகும். தென்
அமெரிக்காவிலிருந்து 1526 ல்
மேற்கிந்தியத்
தீவுகளுக்கு எடுத்துச்
செல்லப்பட்டு பின்னர்
ஃபிலிப்பைன்சுக்
கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரா
ல் இந்தியாவிற்குக்
கொண்டு வரப்பட்டது.
இந்தியா முழுவதும் சுமார் 41/2
லட்சம் ஏக்கரில்
ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன்
பழங்கள்
சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நாட்டில் பயிராகும்
அனைத்து பழ வகைகளில் மொத்த
எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள்
இருந்தாலும் அவற்றின் உட்புற
நிறத்தைக்
கொண்டு அதை "சிவப்புக்"
கொய்யா என்றும் "வெள்ளைக்"
கொய்யா என்றும்
இரு வகையாகப் பிரிக்கின்றனர்.
உட்புறம் சிவப்பாக இருந்தாலும்
வெண்மையாக இருந்தாலும்
சத்தைப்
பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.
கொய்யாப் பழங்களிலும்,
கொட்டையிலும் புரதம்,
கொழுப்பு மற்றும்
மாவுச்சத்துக்கள்
சிறிதளவே இருந்தாலும்
நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு,
பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும்
நிறைந்த அளவில் உள்ளன. 100
கிராம் கொய்யாப்பழத்தில் சுமார்
210 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’
இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நன்கு பழுத்த பழத்தைக்
காட்டிலும் முக்கால் பழமாக உள்ள
பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம்
உள்ளது.
100 கிராம் கொய்யாப்பழத்தில்
அடங்கியுள்ள சத்துக்கள் :
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%.,
கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%
., நார்ச்சத்து-5.2%.,
மாவுச்சத்து-11.2%.,
கலோரி அளவு-51.
மணிச்சத்து, வைட்டமின்கள்,
கால்சியம் தலா -10 மி.கி.,
பாஸ்பரஸ்-28மி.கி.,
இரும்புச்சத்து-0.27மி.கி.,
வைட்டமின் 'சி' 210 மி.கி.,
வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ்-சிறிதளவு.
கொய்யாப்பழத்தின் தோல்
பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’
பல் மற்றும் ஈறு தொடர்புடைய
நோய்களைப்போக்க வல்லது.
பழுக்காத கொய்யாக்காய்
வயிற்றுக்கடுப்பையும்,
வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.
கொய்யா மரத்தின் பட்டை மற்றும்
வேர் ஆகியவற்றைக்கொண்
டு தயாரித்த கசாயம்
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும்
வயிற்றுப்போக்கைத்
தடை செய்யும். இலையைக்
கசாயமிட்டு அதை வாயிலிட்டுக்
கொப்பளிக்க ஈறு வீக்கம்
சரியாகும்.
0 Comment "கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள் !!!!"
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.