தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகி கடந்த 13 ஆண்டுகளில் 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துள்ளனர். அதனால், மதுக்கடை களை மூடிவிட்டு, மாற்றுப்பணி வழங்க வேண்டும் என அரசுக்கு டாஸ்மாக் பணியாளர் சங்கங்களே வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில் 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி அரசு டாஸ் மாக் சில்லறை விற்பனை தொடங் கப்பட்டது. ஆரம்பத்தில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய மேற்பார்வை யாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.1,500 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இப்பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
குடும்பத்தில் விருப்பமோ, சமுதாயத்தில் மரியாதையோ இல்லாத இந்த வேலையில் சேர இளைஞர்கள் ஆர்வம் செலுத்தாத தால் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.2,000, உதவி விற்பனையாள ருக்கு ரூ.1,500 ஊதியம் வழங்கப் படும் என மீண்டும் அறிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வேலைக்கு எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டதாரிகள் வரை விண் ணப்பித்தனர். இவர்களில், 36,000 பேரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேர்வு செய்து, 6,286 கடைகளில் பணி நியமனம் செய்தனர். தற்போது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை 6,856 ஆக அதிகரித்துள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் மதுவுக்கு அடிமையாகி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 4,011 ஊழி யர்கள் மரணமடைந்துள்ளனர். அதனால், டாஸ்மாக் கடை களை மூடிவிட்டு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கங்களே தற்போது அரசை வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் ஏ.ஐ.டியூ.சி. சங்க மாநில பொதுச்செயலர் தனசேகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
டாஸ்மாக் நிறுவனத்தில் வரு வாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற் போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர் கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட் டன. ஆனால், டாஸ்மாக் ஊழி யர்கள் எண்ணிக்கை மட்டும் நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. 36 ஆயிரமாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை, 26,865 பேராக குறைந்துவிட்டனர்.
டாஸ்மாக் கடைகள் தொடங் கியபோது நான்கு ஆண்டு வேலை நியமன தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், படித்த இளைஞர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் இந்த வேலையில் சேர்ந்தோம். அதன்பின் போதுமான ஊதி யம் இல்லை. சலுகைகள் இல்லாததால் பெரும்பாலான ஊழியர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர்.
அதனால் சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பில்லாத இந்த வேலையில் தொடர விருப்பம் இல்லாத டாஸ்மாக் ஊழியர்கள் பலர் சுயதொழில், குரூப்-2, குரூப்-4 தேர்வு எழுதி அரசுப் பணிக்கு சென்றுவிட்டனர்.
1,500 பேர் முதல் 2,000 பேர் வரை தற்போது ‘சஸ்பெண்ட்’, ‘டிஸ்மிஸ்’ நடவடிக்கையில் உள் ளனர். மீதியுள்ளவர்களில் 4,011 பேர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 2012, 2013, 2014 ஆகிய மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் மதுவுக்கு அடிமையானதே.
பலர் குடித்துவிட்டுதான் கடையை திறக்கின்றனர். இவர் கள் குடித்துவிட்டு வாக னத்தை ஓட்டுவதால் விபத்தில் மரணமடைகின்றனர். பலர் உடல் நலத்தை பராமரிக்காமல் மது குடித்தே மாரடைப்பு, கல்லீரல், மஞ்சள் காமாலை நோயால் இறக்கின்றனர்.
வெளியூர்களில் தங்கி பணி புரியும் ஊழியர்கள், வாரம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக் குச் செல்கின்றனர். அதனால், இயற்கையாகவே குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு புரிதல் இல்லாமல் பலர் தற்கொலை செய்துள்ளனர்.
சனி, ஞாயிறு விடுப்பு வேண்டும்
இவ்வாறு டாஸ்மாக் ஊழியர்கள் 4,011 பேரின் மரணத்துக்கு அடிப்படை காரணமாக மது இருந் துள்ளது. கடந்த 13 ஆண்டு களில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்க்கிறோம். அதற்கு நாங்களும் ஒரு வகையில் காரணம் என்கிறபோது வேதனையாக உள்ளது.
அதனால், டாஸ்மாக் கடை களை மூட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. முதற்கட்டமாக மாதத்தின் முதல் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து படிப்படியாக மூடலாம் என்றார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் வருவாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர்கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன.
0 Comment "மதுவுக்கு 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் பலி: கடைகளை மூட பணியாளர்களே வலியுறுத்தல்"
Post a Comment