அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பொது மேடையில் விவாதம் நடத்தினர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூசியாணா ஆளுநர் பாபி ஜிண்டால் உட்பட 17 வேட்பாளர்கள் பங்கேற்றனர்.அப்போது ஒபாமாவின் கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியும் இப்போதே பிரச்சார களத்தில் குதித்துள்ளன.
ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அதிபர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல குடியரசு கட்சி சார்பில் 17 பேர் அதிபர் வேட்பாள ராக போட்டியிட விருப்பம் தெரி வித்துள்ளனர். இரு கட்சிகளிலும் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு அதிபர் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக உட்கட்சி பொதுமேடை விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி குடியரசு கட்சி வேட்பாளர்கள் பங்கேற்ற பொதுமேடை விவாதம் ஒகியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 10 வேட்பாளர்கள் ஒரு பிரிவாகவும் 7 வேட்பாளர்கள் மற்றொரு பிரிவாகவும் விவாத மேடையில் பங்கேற்றனர்.
இதில் ஒபாமா மேற்கொண்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஐ.எஸ்.தீவிர வாதிகளால் எழுந்துள்ள பிரச்சினை, சட்டவிரோத குடி யேற்றம், பொருளாதாரம், வெளி யுறவு கொள்கை, உள்நாட்டில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத் தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வேட் பாளர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.
பாபி ஜிண்டால் பேசியபோது, நான் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டால் அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த தலைமையை வழங்கு வேன், வாய்பேச்சு வீரனாக இல்லா மல் செயல்வீரனாக இருப்பேன் என்றார்.
0 Comment "அமெரிக்காவில் குடியரசு கட்சி வேட்பாளர்கள் விவாதம்: ஒபாமாவின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு"
Post a Comment