டிராபிக் விதிமுறையை மீறிய சானியா மிர்சாவுக்கு அபராதம் விதிப்பு

ஐதராபாத், 

இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு, டிராபிக் விதிமுறையை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சானியாவின் கார் நம்பர் பிளேட் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் தவறாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிராபிக் விதிமுறையை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஜூப்லி ஹில் பகுதியில் சாலை நம்பர் 10-ம் சானியா மிர்சா வாகனம் நிறுத்தப்பட்டபோது புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கார் நம்பர் பிளேட் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் தவறாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
இதனை அடுத்து அவருக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஜூப்லி ஹில் டிராபிக் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி பேசுகையில், “SUV காரின் உரிமையாளரான சானியா மிர்சாவிற்கு ரூ. 200 அபராதம் கட்டக்கோரி இ-செல்லான் வழங்கினோம்,” என்று கூறிஉள்ளார். “காரின் நம்பர் பிளேட், ஒழுங்கற்ற வழியில் காட்டப்பட்டு டிராபிக் விதிமுறை மீறப்பட்டு உள்ளது. நம்பர் பிளேட் ஆனது ஆடம்பரமான முறையில் காட்டப்பட்டு உள்ளது. இதுபோன்ற முறைகளில் நம்பர் பிளேட்களை காட்டுவது என்பது  மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானது,” என்று போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார். 

0 Comment "டிராபிக் விதிமுறையை மீறிய சானியா மிர்சாவுக்கு அபராதம் விதிப்பு"

Post a Comment