துபாயில் உலகின் மிகப்பெரிய உள் அரங்கம்: குடியிருப்பு கட்டிடங்களுட‌ன் பிரம்மாண்ட‌ திட்டம் தொடக்கம்

துபாய்: உலகளவில் அதிகமான சுற்றுலா பயணிகளை கவரும் நகரங்களில் ஒன்றான‌ துபாயில் 711 மீட்டர் உயரத்தில் குடியிருப்புவாசிகளுக்கான உலகிலேயே உயரமான கட்டிடம், உலகின் மிகபெரிய சறுக்கு உள் அரங்கம், மிகபெரிய மால், உலகின் மிகபெரிய நடன நீரூற்றுக்கள், 25,000 சதுர மீட்டரில் ஒரு உள்ளரங்க பல்நோக்கு விளையாட்டு அரங்கம் சைக்கிள் மற்றும் ஜாகிங் செல்வதற்கு நீளமான பாதைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடங்கிய‌ மிகபெரிய திட்டத்தை மெய்தான் நிறுவனம் தொங்கியுள்ளது.

மேலும் 78,300 பேர் இங்கு குடியிருக்கும் வகையில் 885 அடுக்குமாடி குடியிருப்புகள், 350 அறைகள் கொண்ட 5 ஸ்டார் ஹோட்டல், சுமார் 300 உணவகங்கள், கஃபேக்கள், 4 கிலோமீட்டர் கால்வாய் உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் மாநாடு மையம் மிக உயரமான 675 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் என ஏராளமான பிரம்மாண்ட கட்டிடங்கள் இந்த மெய்தான் ஒன் 3.67 மில்லியன் சதுர அடியில் திட்டத்தில் அமைய உள்ளது.

இத்திட்டத்தை அமீரக துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பதுடன் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comment "துபாயில் உலகின் மிகப்பெரிய உள் அரங்கம்: குடியிருப்பு கட்டிடங்களுட‌ன் பிரம்மாண்ட‌ திட்டம் தொடக்கம்"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)