நாட்டிலேயே தூய்மையான 10 நகரங்களில் மைசூர் முதலிடம்; திருச்சிக்கு 2-வது இடம்

தலைநகரங்களில் பெங்களூருவுக்கு சிறப்பிடம்

நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் மைசூர் முதலிடத்தையும் திருச்சி 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன. தலைநகரங்களில் பெங்களூருதான் மிகவும் தூய்மையான நகரம் என்று தெரியவந்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை விளம்பரப்படுத்த முக்கிய பிரமுகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன்படி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் பலர் பங்கேற்று செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மையான நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்தி தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் 31 மாநிலங்களை சேர்ந்த 476 நகரங்களில் (ஒரு லட்சத் துக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நகரங்கள்) திடக்கழிவு மேலாண்மை எப்படி செயல் படுத்தப்படுகிறது, திறந்தவெளி கழிப்பிடம் எந்தளவுக்கு உள்ளது, கழிவுநீர் அகற்றும் முறை, கழிவுநீர் மறுசுழற்சி முறை, குடிநீரின் தரம், ஏரி, குளங்களில் உள்ள நீரின் தரம், தண்ணீரால் பரவும் நோய்களால் இறந்தோர் எண்ணிக்கை போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்த புள்ளிவிவரம் ஒவ்வொரு நகரிலும் சேகரிக்கப்பட்டது.
இந்த 476 நகரங்களில் கர்நாடகத்தை சேர்ந்த மைசூர் முதலிடத்திலும், தமிழகத்தின் திருச்சி 2-வது இடத்திலும் உள்ள தாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திறந்தவெளி கழிப்பிடங்கள் மைசூரில் மிகமிக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு கழிவறை வசதி சிறப்பாக உள்ளது.
தூய்மையான மாநில தலை நகரங்கள் என்று பார்த்தால் கர்நாடக தலைநகர் பெங்களூரு தான் சிறப்பான இடத்தில் உள்ளது. தவிர கர்நாடகத்தின் 3 நகரங்களும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
மேலும் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் மேற்கு வங்கத்தின் 25 நகரங்கள் இடம்பெற் றுள்ளன. ஒட்டுமொத்தமாக 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் தென் மாநிலங்களின் 39 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கடுத்த நிலையில், கிழக்கு மாநிலங்களின் 27 நகரங்கள், மேற்கு மாநிலங்களின் 15 நகரங்கள், வடக்கு மாநிலங் களின் 12 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் 7 நகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் 15 தலைநகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 5 தலைநகரங்கள் 300-க்கு அடுத்த நிலைகளில் உள்ளன. பிஹார் தலைநகர் பாட்னா 429-வது இடத் தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூய்மையான 100 நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நகரங்கள்:
மைசூர் (கர்நாடகா), திருச்சி (தமிழ்நாடு), நவி மும்பை (மகாராஷ்டிரா), கொச்சி (கேரளா), ஹாசன் மண்டியா, பெங்களூரு (கர்நாடகா), திருவனந்தபுரம் (கேரளா), அலிசாகர் (மே.வங்கம்), காங்டாக் (சிக்கிம்), தமோ (மத்தியப் பிரதேசம்).

0 Comment "நாட்டிலேயே தூய்மையான 10 நகரங்களில் மைசூர் முதலிடம்; திருச்சிக்கு 2-வது இடம்"

Post a Comment