பிரசாந்த் நடிப்பில் நீண்டகாலமாக எடுக்கப்பட்டுவரும் படம் சாகசம். இந்தப்படத்தை அப்பா தியாகராஜனே தயாரிக்கிறார். எனவே அவர்களுக்கு வசதியான நேரங்களில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டார்கள்.
எந்த வேலையிலும் அவசரம் காட்டாமல் மிகமெதுவாக வளர்ந்துகொண்டிருக்கும் அந்தப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியிருந்தார். படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவை மலேசியாவில் நடத்தப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது எப்போது என்று சொல்லப்படவில்லை. இந்நிலையில் இந்தப்படத்துக்கான மோஷன்போஸ்டரை சிம்பு வெளியிடவிருக்கிறாராம்.
ஆகஸ்ட் ஐந்தாம்தேதியன்று அவர் வெளியிடவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதற்காக நிகழ்ச்சி எதுவும் நடத்துகிறார்களா என்றால் இல்லையாம். சிம்பு தன்னுடைய டிவிட்டர்பக்கத்தில் அந்தப் போஸ்டரை வெளியிடுவார் என்று சொல்கிறார்கள்.
சாகசம் படத்துக்கு சிம்புவை வைத்து விளம்பரம் தேடும் முயற்சியே இது என்று சொல்கிறார்கள். பிரசாந்த் 1990 இல் நடிக்கவந்தார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து நடிக்கவந்தவர் சிம்பு. சீனியரான பிரசாந்தின் படபோஸ்டரை ஜூனியரான சிம்பு வெளியிடுகிறார் என்கிற பேச்சு வந்துவிட்டது.
0 Comment "பிரசாந்துக்கு உதவி செய்யும் சிம்பு "
Post a Comment