மக்கள் மனதில் no 1 ஆகா வலம் வந்து கொண்டிருந்த தொலைகாட்சி விஜய் டிவி. இந்நிறுவனம் மக்களை தன் பக்கம் கவர வேண்டும் என்று அவங்க மதிப்ப அவங்களே குறைத்து வருகின்றனர். மற்ற தொலைகாட்சியில் வரும் நிகழ்சிகளை விட விஜய் டிவியில் வரும் நிகழ்சிகள் கலகலப்புடன் மக்களை உள் இழுக்கிறது. ஆரம்பத்தில் அது மக்களுக்கு ஒரு பொழுதுபோக்க இருந்தது, தற்போது அதுவே கடுப்பாகி விட்டது.
மேலும், இவர்கள் விஜய் awards ல் செய்த அலும்பு திரையுலகத்தையும் கடுப்படைய செய்து விட்டது. ஒவ்வொரு நிகழ்சிகளிலும் விருதினர்களை வைத்து, நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதும், ஒரு நிகழ்ச்சியில் இவர்களே ஒரு பிரச்னையை உருவாக்கி, மக்களை உள் இழுப்பதை ஒரு வழக்கமாகவும் வைத்து வருகிறார்கள். நேற்று நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் ஒரு பிரச்சனை, என்னடானு பாத்தா உள்ள இருக்க அவங்களே அடுச்சுககுருங்கப்பா..!
ஒரு பொண்ணா சரியா அடலைன்னு வெளிய அனுபிட்டாங்க, நேத்து அந்த பொண்ணு வந்து நா eliminate ஆனதுக்கு நா காரணம் இல்லன்னு ஒரு பிரச்சனைய கொண்டு வந்துருக்கு. இந்த பிரச்னையை மக்கள் கிட்ட கொண்டு வராமா உள்ளேயே முடுச்சுருக்க கூடாதா, அவங்களே பிரச்சனைய கொண்டு வராங்க, அவங்களே பேசாரங்க, அவங்களே முடுசுகிட்டு அடுத்து எப்பவும் போல நிகழ்சிக்கு உள்ள போயிறாங்க…
இந்த செயலே மக்களுக்கு ஒரு கடுப்படையும் செயலாக மாறி விட்டது. இவங்களுக்கு வேற வேலை இல்லன்னு நெனைக்கற அளவுக்கு வந்துருச்சு, தனக்கு தானே ஆப்பு வைக்கறது, தன்னோட மதிப்ப தானே இழக்கறாங்கனு எல்லாம் சொல்லுவாங்கள அது இந்த நிறுவனத்துக்கு பொருந்தும் போல இருக்கு. கடுப்படைந்ததில் நானும் ஒருவர்
0 Comment "தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட “விஜய் டிவி”!"
Post a Comment