கேப்டன் கட்சி நிர்வாகிகள் ஓட்டம்: மட்டன் பிரியாணியை கேப்டன் மகன் ஷூட்டிங்ல போடுங்க!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின்பின் ஏற்கனவே கிடுகிடுத்து போயிருக்கும் கேப்டன் முகாமை, மேலும் தடதடக்க வைத்துள்ளார் விஜயகாந்த். தேர்தல் தோல்விக்கு தாம் காரணமில்லை என்பது போலவும், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள்தான் காரணம் என்ற ரீதியிலும் அவர் குற்றம் சாட்டியதில், கட்சி நிர்வாகிகள் பலர் அப்செட்.

லோக்சபா தேர்தலில், பா... கூட்டணியியிலேயே அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்றது, கேப்டன் கட்சிதான். 14 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்ததும் அக்கட்சிதான்.
கேப்டனும் பாவம், ஓடியோடி பிரசாரம் செய்திருந்தார்.மச்சான் சுதீஷோ ஒருபடி மேலேபோய், அவர் போட்டியிட்ட தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசும்போது, “லேடீஸ், அன்ட் ஜென்டில்மேன்.. நீங்கள் இப்போது, மத்திய அமைச்சர் ஒருவருடைய பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்என தாம் ஏற்கனவே மத்திய அமைச்சர் ஆகிவிட்ட(து போன்ற) மிதப்பில் பேசிக்கொண்டு இருந்தார்.
நல்லவேளையாக, டில்லிக்கு அமைச்சராக போகும் நினைப்பில், ஹிந்தியில் பேசவில்லை. பேசியிருந்தால், இப்போது விழுந்த சொற்ப ஓட்டுக்களும் விழுந்திருக்காது!
இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக, தே.மு.தி.. நிர்வாகிகள் கூட்டம், தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பல்வேறு அணிகளின் செயலர்கள், துணைச் செயலர்கள், (இதுவரை .தி.மு..-வுக்கு தாவாத) எம்.எல்..க்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் அது!
முதலில் பேசிய மாநில பொருளாளர் இளங்கோவன், “தேர்தலுக்காக வசூலித்த நிதியையும், அதன் கணக்கு விவரங்களையும் ஒப்படைக்க வேண்டும்என, நிர்வாகிகளுக்குஉத்தரவிட்டார்.
பாவம், நிதியில் ஏதாவது மிச்ச-சொச்சம் இருந்தால், கட்சிக்கு அதுவாவது மிஞ்சட்டும் என்ற ஆதங்கத்தில் உத்தரவிட்டிருப்பார் அவர்.
இதை தொடர்ந்து, விஜயகாந்த், அரை மணி நேரம் பேசியுள்ளார்.
அவரது பேச்சில், கட்சியின் மாவட்ட செயலர்களைதான் கடுமையாக திட்டியதாக சொல்கிறார்கள்.
தேர்தல் தோல்விக்கு மாவட்ட செயலர்களே காரணம். கட்சியை வளர்க்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மொபைல் போனில்தான் கட்சி பணி செய்தனனர். நேரில் எங்கும் செல்வதே இல்லை. பல பூத்களில் தே.மு.தி..வுக்கு ஏஜென்ட்கள் கூட நியமிக்கவில்லை (ஒருவேளை தேர்தல் முடிவை முன்கூட்டியே ஊகித்திருப்பார்களோ!). இதுவே தேர்தல் தோல்விக்கு அடிப்படை காரணம்என கோபமாக பேசினாராம், விஜயகாந்த்.
அதன்பிறகு, என்ன யோசித்தாரோ தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களையும் தனித்தனியாக தன் அறைக்கு அழைத்து, தோல்வி குறித்து விசாரித்தார். இவர்கள் .தி.மு..-வுக்கு (தப்பி) ஓடிவிடுவார்களோ என்ற பயம் காரணமாகவே இந்த விசாரணை என்கிறார்கள்.
14 பேரிடமும் தனித்தனியாக பேசிய கேப்டன், “தே.மு.தி..-வில் இருந்து .தி.மு..-விற்கு சென்றவர்கள் யாரும், அங்கு நிம்மதியாக இல்லை. தே.மு.தி..-விற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. எனவே, தே.மு.தி..-வை விட்டு வெளியேற வேண்டாம்என்று சொன்னாரம்.
இந்த அட்வைஸூக்கு பிறகு மீண்டும் வெளியே வந்து மற்றவர்களிடம் பேசிய கேப்டன், “என் மகன் நடிக்கும் சினிமா வேலையில் பிசியாக இருக்கிறேன். இப்போது வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்தது போல, விரைவில் மாவட்ட செயலர்களையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்க இருக்கிறேன். கூப்பிட்டு அனுப்புகிறேன். தவறாமல் வந்துருங்கஎன்றுவிட்டு, வாட்ச்சை பார்த்தாராம்.
அப்போது மதியம் 2 மணி ஆகிவிட்டிருந்தது.
சரி. உங்க எல்லோருக்கும் சாப்பாடு சொல்லியிருக்கு. சாப்பிட்டு விட்டு தெம்பாக ஊருக்கு போங்கஎன கூறிவிட்டு, மகன் நடித்த ஷூட்டிங்குக்கு கிளம்பி போய்விட்டாராம் கேப்டன்.
அதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு, மட்டன் பிரியாணி, வெங்காய பச்சடி, பிரட் அல்வா, கத்தரிக்காய் தொக்கு ஆகியவை கமகமவென வந்து இறங்கின.
கேப்டன் தம்மை மட்டுமே தேர்தலுக்கு பொறுப்பாக்கிவிட்டு, ஷூட்டிங்குக்கு கிளம்பியதில் கடுப்பில் இருந்த நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பலர், பிரியாணி சாப்பிடாமல் கிளம்பி விட்டனர்.
பிரியாணியை கேப்டன் மகன் ஷூட்டிங்கில கொண்டுபோய் கொடுங்க. சின்ன கேப்டனாவது தெம்பாக நாலு பேருக்கு அடிக்கட்டும்என்றபடி துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பி சென்றார், ஒரு மாவட்ட செயலாளர்!




0 Comment "கேப்டன் கட்சி நிர்வாகிகள் ஓட்டம்: மட்டன் பிரியாணியை கேப்டன் மகன் ஷூட்டிங்ல போடுங்க! "

Post a Comment