காதலன் 10 மணி நேரம்தான் உயிர்வாழவான் என தெரிந்தும் கைபிடித்த காதலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரவ்டன் கோ பாங்கோகா (வயது 29) இவர் லிசில் (வயது 23) என்ற பெண்ணை காதலித்து வந்தார். வரும் ஜூலை மாதம் இவர்களுக்கு திருமணம் நடப்பதாக நிச்சயைக்கபட்டு இருந்தது. இந்நிலையில்  ரவுடன்காவுக்கு கடந்த மே மாதம் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடரந்து அவர் மணிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவருடைய புற்றுநோய் நாளுக்கு நாள் முற்றி  அவரது கல்லீரல் முழுவதும் செயலிழந்துவிட்டது. இதனால் அவர் 12 மணிநேரத்திற்குள் இறந்துவிடுவார் என டாகடர்கள் கூறி விட்டனர். தனது காதலர் மரணமடைவதற்குள் அவரை கைபிடிக்க காதலி சிலில் விரும்பினார். இதனால் தங்களுடைய திருமணமத்தை உடனடியாக நடத்த வேண்டும் என கூறினார். ஆனால் உறவைனர்கள் எல்லோரும் ரவௌடன் 12 மணி நேரத்தில் இறந்து விடுவான் உனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறினார். இருந்தாலும் லிசில் தனது காதலரை  கைபிடிப்பதில் பிடிவாதமாக இருந்தார், இதனால்  இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனையிலேயே ஒரு அறையில் அலங்காரம் செய்யப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தரவுடனுக்கு என்பவருக்கு திருமண ஆடை அணிவித்து, மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் கண்ணீருடன் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து மிகச்சரியாக 10 மணி நேரத்தில் ரவ்டன் மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது உலகம் முழுவதும் இணையதளங்களில் பதிவாகி ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகின்றனர். மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை காண்போர்கள் கண்டிப்பாக கண் கலங்குவார்கள். https://www.youtube.com/watch?v=eVocnNIgKwY&feature=youtu.be

0 Comment "காதலன் 10 மணி நேரம்தான் உயிர்வாழவான் என தெரிந்தும் கைபிடித்த காதலி "

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)