பெருகி வரும் பேயிங் கெஸ்ட் கலாச்சாரம்

இந்தியாவில் மும்பைக்கு அடுத்தப்படியாக தென்னிந்தியாவில் ஐடி தொழில்துறை அதிக வளர்ச்சியைக் கண்டுள்ள நகரங்களில் பெங்களூருவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த அபிவிருத்தியால் பலதரப்பட்ட மக்களும் வந்து போகும் கலாச்சார மையமாக அந்நகரம் மாறியபோது அதனை ஒட்டிய பல தொழில்முறைகளும் அதற்கான வருமானங்களும் அங்கு அதிகரிக்கத் துவங்கின.

இவ்வாறன ஒரு பொருளாதார அபிவிருத்தியைத் தருவதான பேயிங் கெஸ்ட் கலாச்சாரம் தற்போது பெங்களூருவில் கொடி கட்டிப் பறந்து வருகின்றது.

1998-99களில் ஏற்பட்ட பணவீக்கம், கூடுதல் வருமானம் போன்ற சொற்றொடர்கள் இங்குள்ள மக்களை தங்கள் வீட்டில் உள்ள அதிகப்படியான அறையை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதில் அதிகரிக்கத் தொடங்கிய வருமானத்தைக் கண்டு நாளடைவில் விருந்தினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தோதாக கட்டிடங்களை கட்டி மக்கள் வாடகைக்கு விடத் துவங்கிவிட்டனர்.

ஒரு கட்டத்தில் 12 படுக்கைகளுக்கு மேல் இருக்கும் கட்டிடங்கள் வணிக வரி வரம்பின் கீழ் வரவேண்டும் என்று குறிப்பிட்ட அரசு இத்தகைய அமைப்புகளுக்காக பல பாதுகாப்பு விதிகளையும் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு சேவை, பெண்களுடனேயே தங்கியிருக்கும் வார்டன்கள், அவசர உதவிக்கென டிரைவருடன் கூடிய ஒரு கார் போன்ற பல வசதிகளுடன் கூடிய மூன்று பிஜி ஹாஸ்டல்களை நடத்திவரும் பரத், அரசின் இந்த விதிமுறைகளை வரவேற்றுள்ளார்.

இத்தகைய ஹாஸ்டல்களில் தங்கும் வெளி மாநில இளைய சமுதாயத்தினரும் பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் இத்தகைய ஹாஸ்டல்கள் தங்களுக்கு சிறந்தவையாகத் தோன்றுகின்றன என்று குறிப்பிடுகின்றனர்.

எத்தனையோ பாதுகாப்பையும் மீறி சில அசம்பாவிதங்களும் இத்தகைய இடங்களில் நடைபெறும்போதும் இந்த பேயிங் கெஸ்ட் கலாச்சாரம் பெங்களூருவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது எனபதுதான் உண்மையாகும்.

0 Comment "பெருகி வரும் பேயிங் கெஸ்ட் கலாச்சாரம்"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)