நியூசிலாந்து அணியுடன் கிரிக்கெட் ஆட வேண்டும் என்றால் மற்ற நாட்டு அணிகள் அந்த அணியை கண்டு பயப்படுகின்றனவோ இல்லையோ அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிரிஸ் கெயர்ன்ஸுக்கு நிச்சயம் பயப்படும். அவரது பேட்டிங் சரியான நேரத்தில் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும். அசைக்க முடியாத அதிரடி வீரராக அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பும் திறன் எப்போதுமே கெய்ர்ன்ஸுக்கு உண்டு.
1970ல் நியூஸிலாந்தின் மார்ல்ப்ரோவில் பிறந்த கிரிஸ் கெய்ர்ன். இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுடையவர். அவர் அணிக்கு ஆட வந்த வருடம் 1989 இதிலிருந்து அவர் ஓய்வு பெற்ற 2004ம் வருடம் வரை அணியில் நட்சத்திர வீரராகவே வலம் வந்தார் கிரிஸ் கெய்ர்ன்ஸ்.உலகத்தின் சிறந்த ஆல்ரவுண்டர் என வர்ணிக்கப்பட்ட கிரிஸ் கெய்ர்ன்ஸுக்கு ஐசிசி விஸ்டன் விருது வழங்கி கெளரவித்தது.
இவ்வளவு பெருமை மிக்க கிரிஸ் கெயர்ன்ஸின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? சொன்னால் நம்ப முடியாது, அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு உள்ள செய்தி தான் அது. கிரிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது ஒரு பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் வேலையையும், மணிக்கு 17 டாலர் என்ற விகிதத்தில் ட்ரக் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார் என்பது தான்! அதுமட்டுமின்றி 44 வயதான இவரை தற்போது இங்கிலாந்து அதிகாரிகள் மேட்ச் பிக்சிங் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள சக வீரரான டியோன் நாஷ் ''அவரது நிலை எனக்கு வருந்ததக்கதாக உள்ளது, இந்த நிலையில் இருக்கும் அவரை பார்க்கவே சங்கடமாக உள்ளது. அவருக்கு எங்களால் முடிந்த உதவியை செய்வோம். அவர் ஒரு சாம்பியன், அவர் இதிலிருந்து விரைவில் மீண்டுவருவார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கிரிஸ் கெய்ர்ன்ஸின் மனைவி மெல் க்ராஸர் ''அவருக்கு வேறு வழியில்லை அவர் இதனை சந்தித்து தான் ஆக வேண்டும், நாங்கள் இப்போது சொந்த வீட்டில் கூட இல்லை வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் என்று கூறியுள்லார்.
0 Comment "வண்டி ஓட்டி வாழ்க்கை நடத்தும் நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் கிரிஸ் கெயர்ன்ஸ்!"
Post a Comment