கடலின் இயற்கை மிக நுட்பமானது. !!

மனிதக் குறுக்கீடுகளை அது ஒருபோதும் ஏற்பதில்லை. கல்லூரி நாட்களில் கன்னியாகுமரி ஒரு சிறு கிராமம்தான் குமரி பகவதி அம்மன் கோவிலும், மலையளவு உயர்ந்த மணல் தேரியும்தான் அன்றைய கன்னியாகுமாரியின் அடையாளங்கள்.
கடலின் நடுவிலிருந்து ஒரு பாறையின் மீது மனிதன் காலூன்ற மேற்கொண்ட முயற்சியின் துவக்கமே இன்றைய சீரழிவின் தொடக்கம்.
கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல சில மீட்டர் அளவிலான படகணையும் துறை கட்டப்பட்டபோது, காலம் காலமாக இருந்துவந்த மணல்தேரி காணாமலானது.
குழந்தைகளின் காலடிகளை முத்தமிட கரையை மெதுவாக மோதிக்கொண்டிருந்த கடலலைகள் சீற்றம் கொண்டு கரையைத் தாக்கின. கடற்கரையில் கற்பாறைகள் அடுக்கப்பட்டு, குழந்தைகளின் கால்களுக்கும் கடலைக்குமான உறவு நிரந்திரமாகத் தடுக்கப்பட்டது. கடல் நீரோட்டம் தடைபட்டதே இதன் காரணம்.
கடல் நீரோட்டம் கடலின் உயிர்மூச்சு. கடல்சார்ந்து வாழும் மீன்கள் மனிதர்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் உயிர்மூச்சு கடல் நீரோட்டம்தான். கடலோர சமுகம் காலம் காலமாக கடலோடு இணைந்து வாழ்ந்த சமுகம். வாழ்வனுபவங்களிலிருந்து கடல்சார்ந்த அறிவை சேகரித்து அது சேமித்து வைத்துள்ளது.
கடற்கரையில் புதிய திட்டங்களுக்கு இடமேயில்லை என்பதல்ல. திட்டங்களை முடிவு செய்யும்போது கடலோர சமுகத்தின் கடல்சார்ந்த அறிவும் கணக்கிலெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
படத்தில் காண்பது நினைவு மண்டபம் கட்டுவதற்கு முன்பு இருந்த "கன்னியாகுமரி பாறை."

0 Comment "கடலின் இயற்கை மிக நுட்பமானது. !!"

Post a Comment