படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல.....

படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல....
காய்கறி வாங்க கடைக்கு சென்றேன்.. அங்க எனக்கு முன் ஒரு பெரியவர் வாங்கி கொண்டிருந்தார்....
வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக மாறியது).. சந்தனகலர் கட்டம் போட்ட சட்டை... கையில் ஒரு கருப்பு குடை...
சில காய்கறிகளை வாங்கினார்.. கடையில் இருப்பவர் விலை சொன்னதும் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....
கடைக்காரர் பாலிதீன் பை எடுத்தார்...
பெரியவர்: வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...
கடைக்காரர்: பழைய பாலீத்தின் பைய ஏன் தூக்கிட்டு திரியுறிக்க?..... உங்களுக்கு கொடுக்கிற ஒரு பையில் நான் கொறஞ்சிடமாட்டேன்...
பெரியவர்: நீ பெரிய கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்... இந்த கருமத்தல(பாலிதீன்) வீடு குப்பையாச்சி... ஊரு குப்பையச்சி... நாடு குப்பையாச்சி... இந்த உலகமே குப்பையாச்சி... மண்ணுல போட்டா மண்ண கெடுத்துடுது... எரிச்சிவிட்டா காத்த கெடுத்துடுது...
இலவசமா கிடைக்குது.. பயன்படுத்த சுலபமா இருக்கு... அதுக்காக ஏன் நல்லா இருக்குறத குப்பைல போடனும்.... அந்த பை எவ்வளவு காலம் உழைக்குதோ அதுவரைக்கும் பயன்படுத்திவிட்டு இனி முடியாதுங்குற போது தூக்கி குப்பைல போடு.... இப்படி செஞ்சாலே கொட்டுற முக்காவாசி குப்பைங்க கொறஞ்சிடும்...
பயன்படுத்திய பொருளை எடுத்துவச்சி திரும்ப பயன்ப்டுத்துவதில் என்ன வெட்டம்?...(முனுமுனுத்து கொண்டே சென்றார்...)
சுட்டிவிரலில் ஊசியால் குத்தியதுபோல் சுள் என்று இதயத்தில் ஒரு வலி....
படித்தவர்கள்..... பட்டத்துக்கு மேல் பட்டம் வாங்கி குவித்தவர்கள்.... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள்... அனைத்து மொழி செய்திதாளையும் தினந்தோறும் தவறாமல் படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்....
இதில் எத்தனை பேர் இதை யோசிச்சிருப்பாங்க..... எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....

பயன்படக்கூடிய பொருள் குப்பைக்கு போவதை தடுத்தாலே... சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக குறையும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது....
5 நிமிடத்திற்கு முன் சாதாரண பாமரனாக தெரிந்த அவர்...
5 நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக தெரிந்தார்..
அன்றிலிருந்து நானும் அதனை பின்பற்ற முயலுகிறேன்... நீங்களும் முயன்று டான் பாருங்களேன் ...
சுற்றுசூழலை காப்போம்...

0 Comment "படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல....."

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)