பிரியாணிக்கு தடையா? வெகுண்டார் டோனி


சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். உள்ளூர் வீரரான அம்பாதி ராயுடு, சக வீரர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தனது வீட்டில் இருந்து சுடச் சுட ஐதராபாத் ஸ்பெஷல் பிரியாணியை சமைத்து அனுப்பி வைத்தார். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை சாப்பிட அனுமதி இல்லை என்று கூறிய ஓட்டல் நிர்வாகம், ராயுடு அனுப்பிய பிரியாணியாக்கு தடை போட்டது.
சுவையான வீட்டு பிரியாணிக்காக ஆவலோடு காத்திருந்த டோனி, இதனால் மிகுந்த ஆத்திரமடைந்தார். உடனடியாக அனைத்து வீரர்களையும் அழைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டலை காலி செய்த அவர், வேறு ஓட்டலில் அறை களை புக் செய்து அங்கு சென்று தங்கியதுடன் ராயுடு வீட்டு பிரியாணியை ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

0 Comment "பிரியாணிக்கு தடையா? வெகுண்டார் டோனி"

Post a Comment