திமுக – மதிமுக மீண்டும் கூட்டணி?

தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘‘ஜனநாயகத்தை காப்பாற்ற, பணநாயகத்தை வீழ்த்த, சர்வாதிகாரம் இல்லாத சூழ்நிலையை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பேசும்போது, ‘‘அனைவரும் ஒற்றுமையாக இருந்து 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஈ.வி.கி.சம்பத் உண்ணாவிரதம் இருந்தபோது அவரை அண்ணா சென்று பார்த்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறையில் இருந்தபோது தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று பார்த்தார். இது அரசியல் பண்பாடு என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நேற்று பூந்தமல்லியில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டில் வைகோவும் தி.மு.க.வை ஆதரித்து பேசினார். அவர் பேசும்போது, ‘‘தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்து முன்னணியில் இருந்தது. இப்போது கடைசி மாநிலமாகி விட்டது.
ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசக்கூடாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். அதை நான் வரவேற்கிறேன். எதிரியை நாங்கள் முடிவு செய்து விட்டோம். எதிரியை வீழ்த்துவதற்கு நண்பனை ஆதரிப்போம்’’ என்று வைகோ பேசினார்.
இந்த பேச்சின் மூலம் வருகிறசட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர ம.தி.மு.க. தயார் ஆகிவிட்டது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறி உள்ளார். எனவே தி.மு.க.–ம.தி.மு.க. மீண்டும் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது என்று தி.மு.க., ம.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

0 Comment "திமுக – மதிமுக மீண்டும் கூட்டணி? "

Post a Comment