கொஞ்சம் சிரிங்க பாஸ்

10 ஆண்டுகள் கழித்து பத்திரிகைகளில் வரவிருக்கும் சிறுசிறு செய்திகள் எப்படி இருக்கும் என பார்ப்போமா?
*பிரதமர் அரவிந்த் கெஜ்ரிவால் 3 நாள் பயணமாக கியூபா சென்றார்.
*ஐஸ்வர்யாவின் மகளுடன் ஜோடி சேர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புது படம் நாளை துவக்கம்.
*இந்திய அணியின் கேப்டனாக தெண்டுல்கர் மகன் அர்ஜுன் தேர்வு.
*ராஜபக்சே போர்குற்றம் புரியவில்லை! வைகோ பேட்டி.
*தமிழக பாஜக தலைவராக நமீதா தேர்வு.
*தமிழக முதல்வர் உதயநிதி நாளை ஊட்டி பயணம், அடுத்த மாதம் 5ம் தேதி சென்னை திரும்புகிறார்.
*வந்தவாசியில் 3 கிராமங்களை கொளுத்திய பாமக வினர் கைது.
*ஜெயலலீதா பெயரில் கோயில் கட்டிய தா.பாண்டியன்.
*ஜெயலலீதாவுக்கு மணிமண்டபம் கட்டுவோம். -சரத்குமார்
*விஜயகாந்த் சிலை இடிப்பை கண்டித்து பிரேமலதா உண்ணாவிரதம்.
*ஜனாதிபதி நாராயணசாமி ஏர்ப்போட்டில் பேட்டி, இன்னும் 15 நாளில் இரண்டாவது அணுவுலை இயங்கும் என நம்பிக்கை.
*தமிழீழ பிரதமர் நாளை சென்னை வருகை. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.
*மனநோயாளிகள் காப்பகத்திலிருந்து தமிழருவி மணியன் தப்பியோட்டம்.
*வடக்குமாகாண பஞ்சாயத்து தேர்தலில் ராஜபக்சேவுடன் கூட்டணி, வைகோ பேட்டி.
*வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் ரமணன் ஓய்வு பெற்றார்.
*ஆசிரியர்தினம், தமிழக ஆளுனர் காடுவெட்டிகுரு வாழ்த்து. வன்முறை இல்லாத தமிழகம் மலரச்செய்ய குழந்தைகளுக்கு அழைப்பு!
*சங்கர மடத்தின் புதிய சங்கராச்சாரியாக காஞ்சிபுரம் தேவநாதன் நியமனம், ஆசாராம் பாபு வாழ்த்து!
*ஆர்எஸ்எஸ் மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு.
*கச்சத்தீவில் மீனவர் ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்க தமிழக அரசு 12கோடி நிதி ஒதுக்கீடு.
*மெரினாவில் சிம்பு சிலை அகற்ற உயர்நீதிமன்றம் தடை.
*ராமர் பாலத்தில் பயங்கர விபத்து. போக்குவரத்து பாதிப்பு.
*சந்திரனில் இருந்து வடை இறக்குமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்! பாட்டி மகிழ்ச்சி.
*செவ்வாய் கிரகத்தில் கூல்டிரிங்ஸ் கண்டுபிடிப்பு, காசிமேடு விஞ்ஞானிகள் சாதனை.
*சமூகவிரோதிகளின் இருப்பிடமாக மாறிய போயஸ்கார்டன். பொதுமக்கள் வேதனை.
*ஆஸ்கார் விருது பெற்றார் கானா பாலா.

0 Comment "கொஞ்சம் சிரிங்க பாஸ்"

Post a Comment