சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போகிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவியுடன் ஜோடி சேரப்போகின்றாராம். அரண்மனை, ராஜவம்சம் என சரித்திர பின்னணிகொண்ட இந்த கதையில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். இரண்டு தலைமுறைக் கதை என்பதால், தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு, ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்கப்போகின்றார். மகனாக நடிக்கும் விஜய்க்கு ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
மூன்று தலைமுறை நாயகர்களுடன் நடித்தவர் ஸ்ரீதேவி. கல்யாணத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக சினிமா பக்கமே வராத ஸ்ரீதேவி, மீண்டும் ‘இங்கிலீஷ் விங்லீஷ்’ என்ற படத்தின் மூலம் நாயகியாக ரீஎண்டரி கொடுத்தார். தற்பொழுது தமிழின் முன்னணி நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரப்போவதால் மூன்று தலைமுறை நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் என்ற பெருமையைப் பெறப்போகின்றார்.
இது ஒரு புறமிருக்க தன்னைவிட வயதில் மூத்த நடிகையுடன் விஜய் நடிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என கேக்குறீங்களா…! பொதுவாக நடிகர் விஜய், நடிகைகளுக்கு கொஞ்சம் வயதாகிவிட்டால் அவர்களுடன் நடிக்காமாட்டார். புது புது நாயகிகளுடன் மட்டும் தான் ஜோடி சேருவார்.
ஒரு கட்டத்தில் விஜய்யின் படத்தில் தொடர்ச்சியாக நடித்தவர் நடிகை மூணுஷா. மூணுஷாவும் விஜய்யும் ஜோடியாக நடித்த படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றதால் மிகவும் ராசியான நடிகை எனக்கூறி தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வைத்தார் விஜய். மூணுஷாவும் நீண்டகாலமாக சினிமாவில் இருப்பதால் பலரும் அவருடன் நடிப்பதை தவிர்த்து வந்தனர். எனவே, விஜய் உதவுவார் என அவரிடம் உதவிகேட்டுள்ளார். ஆனால் விஜய், உனக்கு வயதாகிவிட்டது கல்யாணம் செய்து செட்டில் ஆவதை விட்டு விட்டு இன்னும் ஏன் நடிக்க ஆசைப்படுகின்றாய் எனக்கூறி நடிகையிடம் இருந்து கழன்றுவிட்டார். இதை மூணுஷாவே மேடையில் பேசும்போது மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்பொழுதோ விஜய் தன்னை விட வயதில் மூத்தவருடன் அதுவும், மூன்று தலைமுறைக்கு முந்தைய நாயகியுடன் நடிப்பதற்கு எப்படி சம்மதித்தார் என கோடம்பாக்கத்தினர் பலரும் வியப்பில் உள்ளனர். ஒரு வேலை சின்ன வயதில் ஸ்ரீதேவிதான் விஜய்யின் கனவுக்கன்னியாக இருந்திருப்பார் போல, அப்பொழுது நிறைவேற்ற முடியாத ஆசையை இப்பொழுது நிறைவு செய்துகொள்வார் என சினிமாக்காரர்கள் முணுமுணுக்க துவங்கியுள்ளனர்.
0 Comment "விஜய்யின் அடுத்த படத்தின் கதை இதுதான்; விஜய்யின் ஜோடி ஸ்ரீதேவி தான் !"
Post a Comment