கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் உள்ள வாட்டிகனுக்கு அடுத்து
உலகில் உள்ள குட்டி நாடு இது.உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ.
v மொனாக்கோ ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு அருகே உள்ளது.
v இந்த நாட்டின் பரப்பளவு மொத்தமே 499.2 ஏக்கர்தான்.
v
மொத்த சாலை தூரம் - 4.4 கிலோமீட்டர்தான். கடலோரப் பகுதி - 4.1 கிலோ
மீட்டர்
v
நிலப்பரப்பு பட்டியலில் உலக அளவில் மொனாக்கோவுக்கு 248வது இடம்.
v
இந்த நாட்டின் மக்கள் தொகை தற்போது 36, 371.
v
மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ,இங்கு சராசரியாக மக்கள் 90 வயதுவரை
வாழ்கிறார்கள்.
v
பிரான்ஸுடன் இணைந்து இருந்த இந்த நாடு 1861-ம் ஆண்டில் தனி
நாடானது.
v
இங்கு மக்கள்தொகை குறைவாக இருப்பதால் வெளிநாட்டு மக்கள் குடியேற
முன்பு அதிகம் அனுமதிக்கப்பட்டார்கள்.
v மக்கள் தொகை இருமடங்காகி விட்டதால் நாட்டின் பரப்பளவை அதிகரிக்கத தொடங்கியுள்ளார்கள். எப்படித் தெரியுமா? கடலிலேயே பிரம்மாண்டமான கட்டிடங்களைக்
கட்டி வருகிறார்கள்.
v
உச்சக்கட்டமாக கடலுக்குள் பாதாளம் அமைத்து அங்கு ஒரு நகரை
உருவாக்கவும் மொனாக்கோவில் திட்டமிட்டுவருகிறார்கள்.
0 Comment "உலகின் குட்டி நாடு இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ."
Post a Comment