உங்களுக்கு பழைய சாதத்தில் இருக்கும் பலன் தெரியுமா?...

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க மருத்துவர்கள்.
குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.
பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச் செய்கிறது.
உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது.
முதல் நாள் இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய் வைத்து சாப்பிடலாம்.

0 Comment "உங்களுக்கு பழைய சாதத்தில் இருக்கும் பலன் தெரியுமா?..."

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)