மலேசிய விமானம் விபத்தில் சிக்கவில்லை முன்பே திட்டமிடப்பட்டது புதிய புத்தகத்தில் தகவல்

 
மாயமான விமானம் குறித்து நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் ஈவான் வில்சன் மற்றும் ஜெப் டெய்லர் இருவரும் மாயமான விமானம் குறித்து தங்களது சமீபத்திய புத்தகத்தில் தெரிவித்துள்ள கருத்தில், விமானம் விபத்தில் சிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.  அது முன்பே திட்டமிடப்பட்டு, சரியாக கணிக்கப்பட்டு நடத்தப்பட்டு உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.  நியூசிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளரும், வர்த்தக விமானத்தின் விமானியும் மற்றும் ஹாமில்டன் நகர கவுன்சிலருமானவர் ஈவான் வில்சன்.  இவர், வைகாடோ டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் ஜெப் டெய்லர் என்பவருடன் இணைந்து புதிதாக புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

குட் நைட் மலேசியன் 370 தி ட்ரூத் பிஹைண்ட் தி லாஸ் ஆப் பிளைட் 370 என்ற பெயரிடப்பட்ட இந்த புத்தகத்தில் மாயமான விமானம் குறித்து அதன் பின்னணியில் உள்ள உண்மையை தெரியப்படுத்த ஒரு முறையை கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இது குறித்து டெய்லர் கூறும்போது, அது முன்பே திட்டமிடப்பட்டது.  முன்பே கணிக்கப்பட்டது.  அது மீண்டும் நடைபெற அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார்.  ஜூன் மத்தியில் அடுத்த கட்ட விமான தேடுதல் வேட்டையில் ஈடுபட சீனாவின் ராணுவ கப்பல் மற்றும் நெதர்லாந்து நாட்டின் சர்வே கப்பல் ஆகியவை முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்த நிலையில் விமானம் குறித்த இந்த புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்து அது குறித்த முடிவை முதன்முறையாக நாங்கள் வெளியிடுகிறோம்.  விமானம் பயணித்த பாதை, இந்திய பெருங்கடலில் விமானம் மூழ்குவதற்கு பொறுப்பாளி யார் என நாங்கள் நம்புகிறோம் ஆகியவற்றை நாங்கள் வெளியிடுகிறோம் என்றும் வில்சன் தெரிவித்துள்ளார்.  விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மார்ச் 8ந்தேதி புறப்படுவதில் இருந்து தொடங்குகிறது.  அதிகாரிகள் உண்மையை தெரிவிக்க தைரியம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என டெய்லர் கூறியுள்ளார்.  இதற்காக எழுத்தாளர்கள் இருவரும் மலேசியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.  அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பேட்டி கண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

0 Comment "மலேசிய விமானம் விபத்தில் சிக்கவில்லை முன்பே திட்டமிடப்பட்டது புதிய புத்தகத்தில் தகவல்"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)