உத்திர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாரணாசியில் இயங்கி வரும் கோக் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு தடை விதித்துள்ளது.கோக் நிறுவனம் உத்திர பிரதேசத்தின் மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்திடம் அனுமதியின்றி ஒரு நாளைக்கு
20,000 கேஸ்களை தயாரிப்பதற்கு பதில்
36,000 கேஸ்களை தயாரிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படும் என்பதால் கோக் நிறுவனத்தின் வாரணாசி ஆலைக்கு தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு மற்றும் இயற்கை விதிமுறை மீறல் புகார்களின் கீழ் கோக கோலா நிறுவனத்தின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்திர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இதற்கு முன்னர் கோக் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு தடை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "வாரணாசியில் கோக் தொழிற்சாலைக்கு தடை !!!"
Post a Comment