பூக்களும் அதன் குணங்களும்...!

நான் தான் உங்கள் பூ பேசுகிறேன்
எனக்கு பூ என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா...?
தெரியாதே.....
ம்ம் சொல்கிறேன் நான் பூமியிலே பிறந்து பூமியிலே இறப்பதால் எனக்கு பூ என்று பெயர் வைத்தார்கள் நம் முன்னோர்கள்
ஒ அப்படியா... ஒகே மற்ற பூக்களும் அடை மொழி உள்ளதே அது எப்படி வந்தது ....
அதுவா சொல்கிறேன் கேள்
கனகாம்பரம் : என் இதயம் கனமானது நான் இரண்டு மூன்று நாள் உயிர் வாழ்கிறேன், என் அறிவியற் பெயர் க்ராசோண்ட்ரா இன்ஃபண்டிபிலிபார்மிசு காலம் முழுவதும் பூப்பதால் கனகாம்பரம் என்று பெயர் வந்தது
ரோஜா : ரோமியோ ஜூலியட் மாதிரி காதல் கொள்ளும் இதயங்களுக்கு அழகை கொடுத்து அமைதியை பெறுகிறேன் அதனால் ரோஜா என்று பெயர் வந்தது
முல்லை : பிள்ளை உள்ளம்போல் பேசும் வாசத்தில் மூளை முடுக்கெல்லாம் மூக்கை துளைத்து மணம் வீசுகிறேன் மேலும் பெண்களின் பால் நோயை விடுத்து வாழ்வதால் எனக்கு முல்லை என்று பெயரும்
அல்லி : ஒரு நாள் அழகு ராணி நான் இரவில் மலர்ந்து காலையில் குவிந்திருப்பேன் எண்ணில் 50 வகைகள் இருப்பதால் நான் அள்ளி என்ற பெயர் கொண்டேன்
சாமந்தி : அந்திப் பொழுதில் காதல் கொண்டு சாந்திகொள்ளும் இறைவனுக்கு சந்தன மாலையாய் சூடுவதால் என் பெயர் சாமந்தி. சாமந்தி பூவிலிருந்து கிடைக்கும் பைரித்ரம் பூச்சிக்கொல்லி யாகவும் கிரைசாந்திமம் சினரேரி போலியம் தயாரிக்கப்படுகிறது.
மேலும் வியாபாரிகளுக்கு நான் இலாபம் ஈட்டு தரும் நல் மலராய் பூக்கிறேன்

மல்லி : மயக்கும் இல்லறத்தில் துள்ளி விளையாடி சொல்லி பேசும் காதலில் கள்ளி கள்ளி என்று அணைக்கு அன்பு உள்ளங்களுக்கு ஆசையை தூண்டும் அமிர்த ரசமாய் மேலும் எண்ணை கொண்டு அர்ச்சனை செய்தால். எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவீர்கள் அதற்க்கு மேலும் நான் உங்களின் குடற்புழுக்களை அழிப்பதற்கும் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம் உதவி செய்கிறேன்
மரிக்கொழுந்து : நாங்கள் வாடினாலும் வாசம் தந்து வாழும் வரை வாசத்துடன் வீழ்கிறோம் அதுமட்டுமா செம்பட்டை முடி நிறம் மாற என் இலைகள் உதவுகிறது. மலைகளையே மணக்க வைப்பதால் மரிக்கொழுந்து என்ற பெயர் கொண்டோம்
குறிஞ்சிப்பூ : பருவப் பெண்கள் போல் நான் பன்னிரெண்டில் பருவமடைந்து உலகின் அதிசய மலராய் காதல் கொண்டு குறிஞ்சி நிலமாய் வளம் கொளிக்கிறேன்.
வேப்பம்பூ : நான் அனைத்து வகையான நோயிகளுக்கும் வேர் முதல் நுனிவரை மருந்தாய் பூப்பதால் என் பெயர் வேப்பம்பூ எண்ணை பற்றி அறியாதோர் இவ்வுலகில் யாரும் இல்லை.
அரளி பூ : நான் மிக அழகான அற்புத வடிவம் கொண்ட பூ எண்ணை பூஜைக்கும் பயன் படுத்துவார்கள் மேலும் நான் ஆட்களை கொள்ளும் விஷத்தன்மை கொண்டதால் அரளிபூ என்று பெயருடன் வாழ்கிறேன்.
வாழைப்பூ : நான் எண்ணற்ற நார்ச் சத்துக்களை கொண்டும் கொழுப்பு அமிலங்களும் போக்கும் நல் மருந்தாகவும் பழங்களை உருவாக்கும் ஊன்று கோலாய் நிலைத்து நிற்கிறேன்...!
இப்போது அறிந்தாயா நீ.... நாங்கள் அழகுக்கு பயன் படுகிறோம் மருத்துவ குணங்களுக்கும் பயன்படுகிறோம் மேலும் கவிஞர்களுக்கும் காற்றுக்கும் வானுக்கும் பேர் உதவியாகவும் ஓர் நாள் வாழ்ந்தாலும் உலகையே ஆண்டு வெற்றி பெறுகிறோம். அதே போல் மனிதர்களும் மனிதில் அழகும் ஈகை திறனும் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை என்றுமே சிறக்கும்.

0 Comment "பூக்களும் அதன் குணங்களும்...!"

Post a Comment