உலகில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து போட்டிகளில் பொதுவாக பெரிய தொடர்களில் சாதிக்கும் போது அல்லது தோல்வியடையும் போது வீரர்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விடுவர்.இது சகஜம். இப்போது நடப்பது உலக கோப்பை போட்டி. இதில் பல வீரர்கள் முதன் முறையாக பங்கேற்கின்றனர். வீரர்கள்
களத்தில் தேசிய கீதத்தை கேட்டவுடன் அப்படியே அழுகை வந்து விடுகிறது. இப்படித்தான், மெக்சிகோவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த லீக் போட்டியில் தேசிய கீதத்தை கேட்டு கண் கலங்கினார் நெய்மர்.இதேபோல கொலம்பியாவுக்கு எதிரான போட்டியிலும் ஐவரி கோஸ்ட் அணி வீரர்கள் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, உணர்ச்சி வசப்பட்ட ஐவரி கோஸ்ட் வீரர் செரி டெய் அழுது விட்டார்.இது குறித்து செரி டெய் கூறுகையில்,‘‘ போட்டி துவங்கும் முன் எனது நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தேசத்துக்காக பங்கேற்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டது. உடனே, அழுகை வந்துவிட்டது. ஏனெனில், இப்படியொரு நாள் மீண்டும் கிடைக்குமா என்று தெரியாது அல்லவா,’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "கால்¬பந்து வீரர் செரி டெய் தேசிய கீதத்தை கேட்டவுடன் அப்படியே அழுகை !!"
Post a Comment