வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியால் தான் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஆகிய இருவரும் கோலிவுட்டில் சிறப்பான ஒரு அந்தஸ்தை பெற்றனர். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இருவருக்கும் படவாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் பெருமளவு உயர்ந்தது. சிவகார்த்திகேயனின் சம்பளம் சுமார் 5 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. திவ்யாஸ்ரீயின் தற்போதைய சம்பளம் ஐம்பது லட்சமாக உயர்ந்துவிட்டது.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம், தனது அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய திவ்யாஸ்ரீயை அணுகியபோது, “இப்போது தன்னுடைய சம்பளம் ஐம்பது லட்சம் என்றும், அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதால் ஐந்து லட்சத்தை மட்டும் குறைத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்ராம், வேறு புதுமுக நடிகையை தேடி வருகிறார். இதேபோல் சிவகார்த்திகேயனை அணுகிய இயக்குனருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
0 Comment "இயக்குநரையே அவமான படுத்திய நடிகை..!"
Post a Comment