ஓராண்டு பணமே இல்லாமல் வாழ்க்கை நடத்திய பெண்

ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம்பெண் க்ரேடா டெளபர்ட் (30). ஓராண்டு பணமே இல்லாமல் தனது வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். பொருளாதார அமைப்பு சீர்குலைந்து போனால் என்ன செய்வது என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த பரிசோதனை என்கிறார்.இதுகுறித்து அவர் கூறும் போது, "பணமே இல்லாமல் வாழ எனக்கு நிறைய சவால்கள் இருந்தன. மாற்று கழி வறைகளும்,உள்ளாடை களும்தான் முக்கிய சவால்களான இருந்தன. மக்கள் ஒன்றாக இணைந்து பயிர் செய்யும் பொதுத் தோட்டத்தில் காய்கறி கள் பயிரிட்டேன். விடுமுறைக் காலத்தில் பார்சிலோ னாவுக்குச் செல்ல‌ 1,700 கிலோமீட்டர் தூரத்தை 'லிஃப்ட்' கேட்டே கடந்தேன். அவ்வளவு ஏன், எனக்கான ஷாம்பூவைக் கூட நானே தயாரித்துக் கொண் டேன்" என்றார்.இந்த ஓராண்டில் நான் கற்றுக்கொண்டதை வாழ்வில் நடைமுறைப்படுத்த முயற்சிக் கிறேன் என்றார்.

0 Comment "ஓராண்டு பணமே இல்லாமல் வாழ்க்கை நடத்திய பெண்"

Post a Comment