அடுத்த வல்லரசு நாடு இந்தியாதான் !”

”இந்தியா அறிவியல் முன்னேற்றத்தில் எங்கோ சென்றுவிட்டது”
“ நமது மாணவர்கள் அறிவியலை சுத்தமாக வெறுத்து ஒதுக்கும் நிலை வருவதற்கு முன், நமது இந்தியப் பள்ளிகளின் அறிவியல் பாடங்களை போதிக்கும் முறையை முற்றிலும் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும்.”
“ நம் நாட்டின் கல்வி முறையில் விரிவான மாற்றம் தேவைப்படுகிறது.முக்கியமாக அறிவியல் மற்றும் கணக்கு போதிக்கும் முறையில் புதிய பார்வை, சீரிய நோக்கு தேவைப்படுகிறது.மேலும் அறிவியல் துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்பதும் சிந்திக்க கூடியதாகும்.”
நிலைமை இப்படி இருக்கையில் பின் ஏன் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா அதீத சக்தியாக உருவாகி வருகிறது. என்று அறிக்கை விட்டு வருகின்றன !?
பிற நாடுகளுக்கு நம் நாட்டுடன் வியாபார ஒப்பந்தமோ அல்லது நமது ஒத்துழைப்போ தேவைப்படும் போது இவ்விதமான பாராட்டுக்களை நாம் கேட்க நேரிடும். 
ஒரு தனி நபரை எப்படி ஒரு ‪#‎பொய்_புகழ்சியின்‬
மூலம் ஏமாற்றி தனது காரியங்களை சாதித்துக்கொள்ள முடியுமோ அதைப்போல் ஒரு நாட்டையும் பிற நாடுகள் ஏமாற்ற முடியும் என்பதற்கு நமது நாடு ஒரு நல்ல உதாரணம்.
நூறு கோடிக்கும் அதிகமான நம் நாட்டின் மக்கள் தொகை, வளர்ந்த நாடுகளின் கண்களுக்கு அள்ள அள்ள குறையாத தங்க புதையலாக காட்சியளிக்கிறது.
தமது நாட்டின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மிகப் பெரிய சந்தையாக நமது நாடு மாற்றப்பட்டிருக்கிறது. 
அதற்கு நன்றிக்கடனாகவோ அல்லது இவர்களும் புதிய கண்டுபிடுப்புகளில் இறங்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினாலோ !? அவ்வப்போது ”இந்தியா மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கிறது “ போன்ற அறிக்கைகளை அவ்வப்போது விட்டுக்கொண்டிருப்பார்கள்.
"செல்போன் சார்ந்த இதர பொருட்கள் விற்பனை, செல்போனின் அண்ணனான கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த பொருட்கள், பிற எலெக்ட்ரானிக் பொருட்களை சேர்த்தால் இன்னும் எத்தனை இலட்சம் கோடிகளோ… இதில் வியப்பளிக்கக்கூடிய அல்லது வருத்தப்படக்கூடிய விஷயமென்னவென்றால், இத்தயாரிப்புகளின் துணை பொருட்களான ஹெட்போன், கார்ட் ரீடர், மவுஸ், கீ போர்ட் போன்றவை கூட இறக்குமதியே !?.
"(ஒரு சில இந்திய கம்பெனிகள் கம்ப்யூட்டர், செல்போன்கள் தயாரிப்பதாக கூறிக்கொண்டாலும்; ஒன்று இவர்களின் பெயரில் வெளிநாட்டில் இருந்து தயாரித்து வாங்கி இங்கு சந்தைப்படுத்துவார்கள் அல்லது மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து இங்கு ஒன்றினைப்பார்கள்.)"
இத்தனை இலட்சம் கோடிகள் அவர்களுடைய பொருட்களை வாங்கும் நமக்கு போகிற போக்கில் நாலு நல்ல வார்த்தைகளை அவ்வப்பொது சொல்லுவிட்டு போகிறார்கள் அவ்வள்வுதான்."
நாம் இங்கு குறிப்பிட்டு இருப்பவை சில பொருட்கள் மட்டுமே இன்னும் எத்தனையோ துறைகளில் நமது பணம் வெளிநாடுகளை வாழ வைக்கிறது.
இதன் காரணமாக நமது நாட்டின் பண மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஏதோ நம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் புண்ணியத்தாலும், ஏற்றுமதியால் வரும் அந்நியச்செலவானியாலும் இந்த பாதிப்பு ஓரளவு சமன் செய்யப்பட்டு வருகிறது.இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
இப்பொருட்களை வாங்குவதோ, உபயோகிப்பதோ தவறு என்பதல்ல நமது வாதம்; இப்பொருட்களை நம்மால் ஏன் தாயரிக்க முடிவதில்லை ? ஒரு வேளை தயாரித்தாலும் தரத்திலும், விலையிலும் ஏன் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை ? குட்டி குட்டி நாடுகளான தைவான், கொரியா போன்ற நாடுகள் கூட இவற்றை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்யும் போது, உலகின் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலும், அதிகமான இளைஞர்களையும், இயற்கை வளங்களையும், வருடத்தில் 365 நாட்களிலும் வேலை செய்யக்கூடிய சீதோஷ்ன நிலையையும் கொண்ட நம்மால் ஏன் முடியவில்லை ? கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை விட்டுத்தள்ளுங்கள்
ஒரு மவுஸ் அல்லது ஒரு கார்ட் ரீடரை கூடவா தயாரிக்க இயலவில்லை !?
காரணம் என்ன ? அரசியல் ? பொருளாதாரம் ? மனித வளம் ? சட்ட திட்டங்கள் ?
இவற்றையெல்லாம் விட அடிப்படை காரணம் ஒன்று உள்ளது அது நமது கல்வி முறை, அதிலும் முக்கியமாக அறிவியல் கல்வி போதனை முறைகளில் மாற்றம் மற்றும் கல்வியை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒழிக்கும் வரை இந்தியாவின் வல்லரசுக் கனவு கனவாக வே இருக்கும் என்பது எமது தாழ்மையான கருத்து.

0 Comment "அடுத்த வல்லரசு நாடு இந்தியாதான் !”"

Post a Comment