ஜெகன்மோகன் ரெட்டி தங்கையை நடிகருடன் இணைத்து ஆபாச வதந்தி.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. திருமணமான இவருக்கு ஒரு மகன் உள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிக்கு ஆந்திரா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்தார். மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.
இந்த நிலையில் இணைய தளத்தில் ஷர்மிளாவை தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஷ் உடன் தொடர்பு படுத்தி ஆபாச தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஷர்மிளா ஐதராபாத்தைச் சேர்ந்த போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டியிடம் புகார் செய்து உள்ளார்.
புகார் மனுவை ஷர்மிளாவின் சித்தப்பா சுப்பா ரெட்டி, கட்சி ஆலோசகர் சோமையாஜுலு ஆகியோர் கமிஷனரை நேரில் சந்தித்து அளித்தனர்.
அதில், சோசியல் நெட் ஒர்க் உள்பட பல வெப்சைட்டில் ஷர்மிளாவை நடிகர் பிரபாசுடன் இணைத்து ஆபாசமாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.
இது குறித்து ஷர்மிளா வெயியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:–
‘‘என்னை கேவலமாக விமர்சித்து இணைய தளத்தில் செய்தி பரப்பப்படுவதை வண்மையாக கண்டிக்கிறேன். என்னை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள் இப்படி துஷ்பிரயோக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு இந்திய கலாச்சார பெண்ணுக்கு, ஒரு கணவரின் நல்ல மனைவிக்கு ஒரு தாய்க்கு, இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுகிறேன்.
இதனை உடனடியாக தடுக்கா விட்டால் இது வளர்ந்த கொண்டே போகும். நான் எனது அண்ணணுக்கு ஆதரவாக அரசியலுக்கு வந்தேன். எனது அரசியல் பிரவேசத்தை விரும்பாத சிலர் என்னிடம் நேரடியாக மோதாமல் இப்படி குறுக்கு வழியில் என்னை களங்கப்படுத்த தரம் தாழ்ந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் பிரபாசை சந்தித்ததும் இல்லை, பேசியதும் இல்லை. என்றும் ஷர்மிளா கூறியுள்ளார்.
30 வயதான நடிகர் பிரபாஷ் திருமணமாகாதவர். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணியில் உள்ளார். ஷர்மிளாவுடன் இணைத்து வெளிவந்துள்ள செய்தி குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை.

0 Comment "ஜெகன்மோகன் ரெட்டி தங்கையை நடிகருடன் இணைத்து ஆபாச வதந்தி."

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)