ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்

ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும்  சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல்  தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா  பிரிவினரை, சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஒட்டுமொத்தமாக சுட்டுக்  கொன்ற சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஈராக் அதிபர் சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பிறகு, ஷியா பிரிவு  தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அமெரிக்க ராணுவம்  வெளியேறியது. தற்போது சதாம் உசேனின் ஆதரவாளர்களான சன்னி  பிரிவினரின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. 

.எஸ்..எல் என்ற படையை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். மொசுல்திக்ரித் உட்பட பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய சன்னி பிரிவினர்  தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறினர். அதைப் கைப்பற்ற  விடாமல் தடுக்க ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவம் தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசூலுக்கு மேற்கே  உள்ள தல்அஃபார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான  பீரங்கி தாக்குதல் நடைபெறுகிறது. ராணுவத்தினரிடமிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியபடி சன்னி  பிரிவினர் இங்கு முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

பாக்தாத் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சியை ராணுவம்  தடுத்தி நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட  ராணுவத்தினர் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவினர் சுட்டுக்  கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் பிரச்னையில்  மீண்டும் தலையிட்டு, மீண்டும்   ராணுவத்தை களம் இறக்க அமெரிக்க  அதிபர் ஒபாமா விரும்பவில்லை. இருந்தாலும் விமான தாக்குதல்  நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்இந்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று வளைகுடா பகுதிக்கு  செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. 




 
 

0 Comment "ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)