பயப்படாதீங்க...ரமணாவெல்லாம் வரமாட்டார்.


சென்னை 11 மாடி கட்டடம் ஜூன் 28ஆம் தேதி மாலை திடீரென சரிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் அதற்குள் புதைந்தனர். இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். கட்டட உரிமையாளர்களுக்கு ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளியுடன் தொடர்பு இருப்பதாலேயே விதி மீறல் நடந்திருக்கலாம் என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், "அனுமதி வழங்கியதில் முறைகேடில்லை... கட்டடம் கட்டியதில்தான் முறைகேடு நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேட்டி கொடுத்திருக்கிறார் முதல்வர்.இதையெல்லாம் படிச்சதுமே... இப்படி விதியை மீறி கட்டடம் கட்டிட்டிருக்கற... கட்டப்போற யாரும் பயந்தெல்லாம் நடுங்காதீங்க. இதெல்லாம் சும்மா நாளைஞ்சு நாளைக்கு பயம் காட்டுவாங்க. கைது கூட பண்ணுவாங்க. மீடியாக்கள்லயும் செய்தியா வந்து குவியும். ஒரு வாரம் போயிடுச்சுனா... எல்லாம் அடங்கிடும். என்ன புரிஞ்சுதா?விஜயகாந்த் நடிச்சரமணாபடத்துல வர்றது மாதிரியேதான் இருக்குது இந்தக் கொடுமைனு ஊர் பூரா பேச்சா இருக்கு. ஆனா, இதுக்காகரமணாவந்துடுவாருனு பயப்படாதீங்க. என்னிக்காச்சும் சினிமா போலீஸ் மாதிரி நிஜ போலீஸை பார்த்திருக்கீங்களா... அதேபோலத்தான் இதுவும். சினிமா ரமணாவுக்கெல்லாம் உயிர் வரப்போறதே இல்ல!

0 Comment " பயப்படாதீங்க...ரமணாவெல்லாம் வரமாட்டார்."

Post a Comment