மலேசியாவில் தன்னுடன் புகைப்படம்
எடுத்தவரை விஜயகாந்த் கன்னத்தில் அடித்ததால்
பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் அவர் மலேசியா சென்றார். இந்தியா திரும்புவதற்கு இரண்டு தினங்கள் இருந்த நிலையில், யாருக்கும்
சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், ‘சகாப்தம்‘. இதற்கு லொகேஷன் பார்ப்பதற்காக, மலேசியா செல்கிறேன்
என கூறினார் ஆனால் அவர் அந்த வேலையை விட்டு விட்டு ஏதோ ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளாதாக
செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் அங்குள்ள சுதேரா ஹார்பர் ஹோட்டல் அறை எடுத்து தங்கியிருந்தனர்.அவர் மனைவியும் அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், ‘நாளைக்கு கிளம்பிருவோம். தலைவரோட போட்டோ எடுக்கணும்னா காலையில வாங்க‘ என்று பிரேமலதா அங்கிருந்த
தமிழர்களிடம் சொன்னாராம். இதை கேட்டு மகிழ்ச்சியில் அவர்களில் காலையில் ஹோட்டல்க்கு சென்றனர். அப்போது, இரண்டு இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்தனர். காரைக்குடியை சேர்ந்த ஷாஜகான் என்ற வாலிபர் மீண்டும் ஒருமுறை விஜயகாந்துடன் நின்று போட்டோ எடுக்க முயன்றார். கடுப்பான அவர், ‘ஏ என்ன நீ, போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா?’ என்று ஷாஜகான் கன்னத்தில் பொளேர் என்று ஒரு போடு போட்டார்.விஜயகாந்த் அடித்த அடி ஷாஜகான் கன்னத்தில்
இடி இறங்கியதால்
தரையில் சரிந்து விட்டார்.
0 Comment "தன்னுடன் புகைப்படம் எடுத்தவரை கன்னத்தில் அடித்த விஜயகாந்த்..!"
Post a Comment