ஈராக்கில் உள்நாட்டுப்போர் உச்சக்ட்டத்தை எட்டியுள்ளது.அங்கே 40 செவிலியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.அவர்களில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த 40 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.அதில் கடத்தப்பட்ட 40
இந்தியர்களில் 39 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.அதே நிறுவனத்தில் பணிபுரிந்த வங்கதேசத்ததை சேர்ந்த ஜமால்கான் என்ற ஊழியர் இந்த தகவலை கூறியுள்ளார்.வங்கதேசத்தை சேர்ந்த 53 ஊழியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பேரை மருத்துமனை ஒனறில் கட்டுமான நிறுவனம் தங்க வைத்ததாக ஜமால் கூறியுள்ளார். பின்னர் எர்ஃபில் நகருக்கு தப்பிச் செல்லும் வழியில் 39 இந்தியர்களை கொன்றுவிட்டதாக ஹர்கித் என்ற ஊழியர் கூறியதாகவும் ஜமால்கான் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிபடுத்த மறுத்துள்ள நிலையில் கடத்தபட்டவர்கள் நலமுடன் இருப்பதாக அவர்களது உறவினர்களும் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "ஈராக்கில் தீவிரவாதிகள் 39 இந்தியர்களை கொலை செய்துவிட்டதாக தகவல்?"
Post a Comment