கெஜ்ரிவால் நேற்று வடக்கு
டெல்லியில் ஆதர்ஷ்நகர் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியதாவது:–49
நாட்களில் டெல்லி ஆட்சிப் பணியில் இருந்து நான் பதவி விலகியதற்காக நீங்கள் என்னை முதலில்
மன்னிக்க வேண்டும்.அதை மறந்து விடுங்கள்.
ஆம் ஆத்மி
கட்சிக்கு இனி தேர்தல் நடக்கும் போது நீங்கள் தனி மெஜாரிட்டி தர வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன். அடுத்தத் தடவை என்னிடம் ஆட்சியைக் கொடுத்து பாருங்கள்.
முன்பு போல இடையில் ஓட மாட்டேன். 5 ஆண்டுகளுக்கு முழுமையான ஆட்சியில் இருப்பேன்
என்று உறுதி அளிக்கிறேன்.மின்
வெட்டை நீக்க மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கும்
மின் உற்பத்தியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு உள்ளது.
பா.ஜ.க.
தலைவர்கள் நாடெங்கும் பா.ஜ.க. அலை வீசுவதாக இப்போதும் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் டெல்லியில் சட்ட சபைத் தேர்தலை நடத்த
வேண்டியதுதானே?இப்போது
டெல்லியில் சட்டசபை தேர்தல் நடத்தத் தயாரா என்று நான் சவால் விடுகிறேன்.
0 Comment "டெல்லியில் சட்டசபை தேர்தல் நடத்தத் தயாரா ?"
Post a Comment