2-2 என்று சமன் செய்ய
மட்டுமே அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முடிந்த போர்ச்சுக்கல் உலகக் கோப்பையை
வெல்லும் அணியாக ஒரு போதும் சொல்ல முடியாது. உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றதே
பெரிய விஷயம் என்று அந்த அணியின் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு
எதிரான ஆட்டத்தில் கடைசி தருணத்தில் ரொனால்டோ அளித்த அபாரமான பாஸ் மூலம் தான்
சில்வஸ்டர் வரேலா கோலை அடித்து சமன் செய்தார்.இந்த நிலையில் குறித்து ரொனால்டோ கூறியதாவது:நாங்கள் உலக
சாம்பியன்களாவோம் என்று ஒரு போதும் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது, நாம் நமது
எல்லைகளை வரையறை செய்து கொள்ளவேண்டும். சில விஷயங்களை நம்மால் செய்ய முடியாது,
வேகமாக ஓடுவது, இன்னும் தரத்தைக் கூட்டுவது போன்றவற்றை எங்களால் செய்ய
முடியவில்லை. இப்போதைக்கு என்ன கூற விரும்புகிறேன் எனில், எங்களை விட சிறந்த
அணிகளும் சிறந்த வீரர்களும் உள்ளனர்.
0 Comment "போர்ச்சுக்கல் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றதே பெரிய விஷயம்:ரொனால்டோ"
Post a Comment