கெயில் பைப்லைன் வெடித்து விபத்து: ஆந்திரத்தில் 15 பேர் பலி விபத்து நடந்தது எப்படி?
ஆந்திரத்தில் நடந்தது..நமக்கும் நடக்கலாம்...பெரு முதலாளிகளின் இலாப வேட்டைக்கு எளிய உயிர்கள் பலியாவதுதான் இன்றைய மனு தர்மமா? 15 உயிர்களை பறித்த கெயில் பைப்லைன் விபத்து எப்படி நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.கிழக்கு கோதாவரி நகரம் கிராமம் மமிடிகுடுரு மண்டல் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் இருந்து 200 அடி தொலைவில் இருந்த பைப்லைனில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்டு அந்தப்பகுதி முழுவதும் எரிவாயு நிரம்பியுள்ளது.அதிகாலை 4 மணி அளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் அடுப்பு பற்றவைத்தபோது காற்றில் பரவி இருந்த எரிவாயு பற்றிக்கொள்ள பைப்லைன் வெடித்துச் சிதறி அப்பகுதியில் இருந்த தென்னந்தோப்பு மற்றும் குடியிருப்புப் பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comment "ஆந்திரத்தில் நடந்தது..நமக்கும் நடக்கலாம்"
Post a Comment