3 நாள் சிறை தண்டனை:கங்கையில் துப்பினால்!!

இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான கங்கையை, தாயாக ஏராளமானோர் வழிபடுகின்றனர். 'ஆட்சிக்கு வந்தால் கங்கையை சுத்தப்படுத்துவோம்' என, லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.அறிவித்திருந்தது. அதன்படி, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், அதற்காக தனி இலாகாவை ஏற்படுத்தியது; பா.ஜ., மூத்த பெண் தலைவர்களில் ஒருவரான உமாபாரதி, கங்கையை சுத்தப்படுத்தும் துறையின் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக கங்கை நதியையும், அதன் பிறகு நாட்டின் முக்கிய நதிகளையும் சுத்தப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான செயல்திட்டத்தையும் வடிவமைத்து வருகிறது.அந்த வகையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, புதிய நடைமுறையையும் பின்பற்றப்பட உள்ளது. கங்கை நதியில் எச்சில் துப்பினால் அல்லது மாசு ஏற்படுத்தும் பொருட்களை வீசினால், அவ்வாறு செய்பவர்களுக்கு குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.கங்கை நதி பாயும் வாரணாசி தொகுதியின் எம்.பி.,யாக பிரதமர் நரேந்திர மோடி விளங்குகிறார்.

0 Comment "3 நாள் சிறை தண்டனை:கங்கையில் துப்பினால்!!"

Post a Comment