நைஜீரிய போகோ ஹராம் அமைப்பை ஒழிக்க சிறிலங்கா இராணுவ உதவிகளை வழங்கவுள்ளது

நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை, ஒழிக்கும் நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவ உதவிகளை வழங்கவுள்ளது.
வடகிழக்கில் மூன்று மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும், போகோ ஹராம் தீவிரவாத அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில், நைஜீரியப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மோசமடைந்து வருகின்றன.
இந்தநிலையிலேயே, தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கையில், சிறிலங்காவின் இராணுவ உதவியை நைஜீரியா நாடியுள்ளது.
இதையடுத்து, சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தலைமையிலான குழுவொன்று நைஜீரியா சென்று கடந்த செவ்வாய்க்கிழமை அந்த நாட்டின் பாதுகாப்பு உயர்மட்டத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
இந்தக்குழுவில், இராணுவத் தளபதி, கடற்படைத் தலைமை அதிகாரி, தேசிய புலனாய்வுச் சேவையின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள், சிறிலங்காவில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு கையாண்டு போர் நுணக்கங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து நைஜீரிய அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.
அதேவேளை, நைஜீரியாவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் போர்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கலாம் என்று தெரியவருகிறது.

0 Comment "நைஜீரிய போகோ ஹராம் அமைப்பை ஒழிக்க சிறிலங்கா இராணுவ உதவிகளை வழங்கவுள்ளது"

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
இணைந்திருங்கள் 24 நேரமும்!! Like us on Facebook!)