இலங்கை
ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, மத்திய உளவுத்துறை செய்த ஒரு ‘தப்பாட்டம்’ சுவாரசியமானது!
இந்திய ‘மத்திய உளவுத்துறை’ என்று சொல்வதன் காரணம், இதில் புகுந்து விளையாடியது இந்தியாவின் எந்த உளவுப்பிரிவு என்று தெரியாததுதான். அது அநேகமாக ‘ரா’ உளவுத்துறையாக இருக்கலாம். சிலவேளைகளில் இந்திய கடற்படை உளவுத்துறையாகவும் (DNI – Directorate of
Naval Intelligence)
இருக்கலாம்.
தமிழக உளவுத்துறை கியூ பிராஞ்ச்க் ஆக இருப்பதற்கும் மிக சிறிய அளவு வாய்ப்பு உள்ளது.
காரணம், அவர்களும் இந்த விவகாரத்தில் ஒருவிதத்தில் தொடர்பு பட்டுள்ளார்கள். ஆனால், அவர்களே முழுமையாக இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை, மற்றொரு மத்திய உளவுத்துறையின் ஆபரேஷனில் வெறும் ‘ஹெல்பராக’ இருந்திருப்பார்கள் என்பதை இந்தக் கட்டுரையை முழுமையாக படித்தபின் புரிந்து கொள்வீர்கள்.
இந்த விவகாரத்தில் இன்னமும் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. இருந்தாலும், அந்த நேரத்தில் கடலில் நடத்தப்பட்ட இந்த ‘பூனை-எலி விளையாட்டு’ மிக சுவாரசியமானது.
இது முழுக்க முழுக்க இந்திய கடலோரக் காவல்படை, இந்திய கடற்படை மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட விவகாரம். இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, இலங்கை கடற்படைக்கு தெரியாமல், இந்தியாவின் ஏதோ ஒரு மத்திய உளவுத்துறை விடுதலைப் புலிகளுக்கு ஒரு உதவி செய்ய முயன்றிருப்பது புரிகிறது.
ஆனால், கடைசி நிமிடத்தில் என்ன நடந்ததோ, எங்கிருந்து என்ன உத்தரவு வந்ததோ, கதை தலைகீழாக மாறியது.
இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பகுதியில் மர்மமாக சில நடவடிக்கைகள் நடைபெற்றன. இலங்கை கடல் எல்லை அருகே இந்திய கடல் பகுதியில், 36 அடி நீளமான கடகு ஒன்றை வெடிக்க வைத்தார்கள்.
அதை வெடிக்க வைத்தது, இந்திய கடற்படை. படகில் ஏராளமான அளவில் வெடிப்பொருட்கள் இருந்தன.
படகில் 5 பேர் இருந்தார்கள். இவர்களை இந்திய
கடலோர காவல்படை கைது செய்தது. இதில் மூன்று பேர் இலங்கையர்கள், இருவர் இந்தியர்கள்.
கைது செய்தவுடன் கோடியக்கரைக்கு கொண்டுவந்து, உடனே டில்லிக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள் இவர்கள் (கைப்பற்றப்பட்ட இரு இந்தியர்களும் யார் என்பதை 2-ம் பாகத்தில் -நாளை- விளக்கமாக தருகிறோம்).
இந்த 5 பேரையும் தாமும் விசாரிக்க வேண்டும் என தலைகீழாக முயன்று பார்த்தது இலங்கை உளவுத்துறை.
ஆனால், மத்திய அரசு இறுதிவரை அனுமதி தரவில்லை. காரணம், இவர்களை விசாரித்தால், அதில் உள்ள இந்திய உளவுத்துறையின் கனெக்ஷன் புரிந்துவிடும் என்பதே!
இப்போது யுத்தம் முடிந்து விட்டது. இனி எந்த ரகசியமும் பேணப்பட வேண்டியதில்லை என்பதால், இந்த சுவாரசியமான விவகாரத்தின் முழுமையான விபரங்களை தருகிறோம், யுத்தத்தின் இறுதிப் பகுதியில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்….
0 Comment "இந்த கதை தெரியுமா? விடுதலை புலிகளுடன் இந்திய உளவுத்துறை கடலில் விளையாடியது "
Post a Comment