v தி.மு.க.
தலைவர் கருணாநிதி தி.மு.க.வுக்கு ஏற்பட்ட சரிவில் இருந்து, கட்சியை மீட்பதற்காக பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
v தி.மு.க.வில்
34 மாவட்டங்கள் இருந்தன. கட்சியின் நிர்வாகத்தை எளிமைப் படுத்துவதற்காக இந்த
மாவட்டங்கள் 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட
செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
v 65 மாவட்ட
தி.மு.க. செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் கட்சித் தேர்தல் மூலமே
தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
v தொடர்ந்து
பலமுறை மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்களுக்குப் பதிலாக, இளைஞர்களை மாவட்ட
செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்று பெரும்பாலான தொண்டர்களிடம் இருந்து கோரிக்கை
எழுந்துள்ளது.
v மூத்த
நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு வேறு பொறுப்புகள்
வழங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
v தி.மு.க.வில்
இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க. தலைவர்
கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி
ஒருவர் தெரிவித்தார்.
v தேர்தல் நிதி
செலவு முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்டுள்ளவர்கள், தேர்தல் பணி
செய்யாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர விசாரணை
நடத்தி வருகிறது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுபவர்கள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும் தலைமை உறுதியாக உள்ளது.
v புதிய
மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் முடிந்த வரை வாரிசுகளை
தவிர்க்க தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.
v கட்சியின்
வளர்ச்சிக்காக தியாகம் செய்தவர்கள், கட்சியை வளர்க்க ஈடுபாட்டுடன்
உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
v
காலத்துக்கு ஏற்ப கட்சியில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு
சரியான நேரம் இதுதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. அவரது சிந்தனை
செயல் வடிவம் பெறும்போது தி.மு.க. மேலும் பலம் பெறும். கட்சியில் நடைபெறும் புதிய
மாற்றங்களால் அனைத்து தரப்பு தொண்டர்களும் பயன்பெற முடியும். இது அவர்களுக்கு
உற்சாகத்தை அளித்துள்ளது.
0 Comment "கருணாநிதியின் அதிரடியால் புத்துணர்ச்சி பெறும் திமுக"
Post a Comment