எனக்கும் சமந்தாவிற்கும் நட்பை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை, அப்படி நடந்தால் கண்டிப்பாக பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைப்பேன் என்று கூறினார். பின்னர் 10 வயது மகன் குறித்த கேள்வி ஒன்றுக்கு சித்தார்த் பதிலளித்தார். “ஆமாம் எனக்கு பத்து வயதில் மகன் இருப்பது உண்மைதான். அந்த மகனின் பெயர் மெளக்லி என்று கூறிய சித்தார்த், அங்கு அழைத்து வந்திருந்த ஒரு நாயை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.
இந்த நாய் அனாதையாக தெருவில் இருந்தது. அதை வீட்டிற்கு அழைத்து வந்து எனது மகன் போல் வளர்த்து வருகிறேன். இவனைத்தவிர எனக்கு வேறு எந்த மகனும் இல்லை என்று கூறினார். பத்திரிகையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து உறுதிசெய்யப்பட்ட செய்தியை மட்டுமே வெளியிடுமாறும், பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய்யான மற்றும் கற்பனையான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சித்தார்த்தின் முகம் தெரியாத பையனுக்கும், அவர் வளர்த்த நாய்க்கும் எப்படி சரியாக 10 வயது வந்தது, என அனைவரும் குழம்பினர். இறுதிவரை இந்த கேள்விக்கு விடைகிடைக்காமல் பத்திரிக்கையாளர்கள் குழப்பத்துடனே அங்கிருந்து சென்றனர்.
0 Comment "ஆமாம் எனக்கு பத்து வயதில் மகன் இருப்பது உண்மைதான் நடிகர் சித்தார்த் !!"
Post a Comment