கால்பந்தாட்ட ரசிகரான அல்-ஜமால் தனது வீட்டில், அலெக்ஸ் மற்றும் மோனா என்ற இரண்டு சிங்கக்குட்டிகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 3-ந் தேதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது.
இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், காலரியில் நின்று கொண்டிருந்த சாத் அல்தீன் அல்-ஜமால் என்ற ரசிகரை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதற்கு காரணம் அல்-ஜமால் தனது கையில் சிங்கக்குட்டியை வைத்துக் கொண்டு ஆட்டத்தை ரசித்தது தான். அலெக்ஸ் என்ற பெயரிடப்பட்ட அந்த சிங்கக்குட்டியை, அவ்வப்போது செல்லமாக அணைத்துக் கொண்டு ஆட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருந்தார் .
0 Comment "விளையாட்டு மைதானத்துக்கு சிங்கத்துடன் வந்த ரசிகர்"
Post a Comment