யோகேந்திர யாதவை அவதூறாகப் பேசி,அடித்து துன்புறுத்திய போலீஸ்; அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி
 
டெல்லி போலீஸின் இந்த செயலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

டெல்லி போலீஸ், மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவராக இருந்தவர் யோகேந்திர யாதவ். அவருக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் யாதவ்  கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது அவரும், பிரஷாந்த் பூஷனும் இணைந்து சுவராஜ் அபியான் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

 மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநில விவசாயிகளைத் திரட்டி டெல்லி எல்லையில் யாதவ் தலைமையில் போராட்டமும் டிராக்டர் பேரணியும்  நடைபெறும் என அறிவித்து இருந்தார். இதையடுத்து விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். 

இதில் யோகேந்திர யாதவும்  கலந்து கொண்டார்  யாதவை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.இரவு முழுவதும் யாதவை போலீசார் நாடாளுமன்ற தெரு போலிஈஸ் நிலைஅயத்தில் வைத்திருந்தனர். 

 இன்று காலை  யோகேந்திர யாதவ் பத்திரிகையாளர்களிடம்  பேசுவதற்காக வந்தார் அப்போது போலீஸார் திடீரென யாதவையும், அவரது ஆதரவாளர்களையும் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்செயலுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டடுவிட்டில், போலீஸாரின் செயலுக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். யோகேந்திரஜிக்கு நடந்தது கடும் கண்டனத்துக்குரியது. அவர்கள் அமைதியான முறையில்தான் போராடியுள்ளனர். அது அவர்களது அடிப்படை உரிமையாகும். அதைத் தடுப்பது சட்டப்பூர்வமான செயல் அல்ல என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால். இதற்கிடையே காவல் நிலையத்தில் போலீஸார் தன்னை அவதூறாகப் பேசியதாகவும், அடித்ததாகவும் டுவிட்டரில் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்  இதுதொடர்பாக கிழிந்த சட்டையுடன் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

0 Comment "யோகேந்திர யாதவை அவதூறாகப் பேசி,அடித்து துன்புறுத்திய போலீஸ்; அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்"

Post a Comment