இந்து முறைப்படி அமெரிக்க பெண் எம்.பி.க்கு திருமணம்

  • அமெரிக்காவை சேர்ந்த பெண் எம்.பி. துள்சி கப்பார்டு (33). இவர் ஹவாய் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரும், சினிமா போட்டோகிராபர் ஆப்ரகாம் வில்லியம்ஸ் (29) என்பவரும் காதலித்தனர்.
  • அதை தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் ஹவாயில் உள்ள ஒயாகு நகரில் நடந்தது. இதில் திருமணம் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடந்ததுதான் சிறப்பு அம்சமாகும்.
  • இந்தியாவில் இருந்து பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் யாதவ் பங்கேற்றார். அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு மற்றும் சிறப்பு வாழ்த்து செய்தியுடன் சென்றார்.


0 Comment "இந்து முறைப்படி அமெரிக்க பெண் எம்.பி.க்கு திருமணம்"

Post a Comment