தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிரடியாக தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம் தாழ்ந்து வருவது குறித்த புகார்களின் அடிப்படையில், திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 கல்லூரிகளில் மாணவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என இந்த கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை"
Post a Comment