உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பணக்கார வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவரது சொத்து மதிப்பு ரூ.1,380 கோடியாகும்.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணியில் ஆடுகிறார். அவர் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) வெய்ன் ரூனி (இங்கிலாந்து) ஆகியோரை முந்தினார்.
மெஸ்சியின் சொத்து மதிப்பு ரூ.1,080 கோடியாகும். ரூனி ரூ.570 கோடி சொத்துடன் 3–வது இடத்திலும், டிராக்பா (ஐவேரி கோஸ்ட்) ரூ.540 கோடியுடன் 4–வது இடத்திலும், சாமுவேல் ஈடோ (கேமரூன்) ரூ.450 கோடியுடன் 5–வது இடத்திலும் உள்ளனர்.
பிரேசிலை சேர்ந்த நட்சத்திர இளம் வீரர் நெய்மர் ரூ.150 கோடி சம்பாதித்து உள்ளார்.
0 Comment "உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பணக்கார வீரர் ரொனால்டோ"
Post a Comment