அணைக்கட்டு அடுத்த வரதலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நதியா (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32). பெயிண்டராக உள்ளார்.
சத்தியமூர்த்தி, நதியா இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி சத்தியமூர்த்தி அடிக்கடி நதியாவிடம் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது நதியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சத்தியமூர்த்தியிடம், நதியா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்து வந்தார்.
மேலும் வேலை விஷயமாக சில மாதங்களாக சத்தியமூர்த்தி கேரளாவுக்கு சென்று வந்துள்ளார். அவரை நதியா போனில் தொடர்பு கொள்ள முயன்றால் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து நதியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது.
அதன்படி நேற்று ஊருக்கு வந்த சத்தியமூர்த்தியிடம், நதியாவை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்தார்.
இது குறித்து நதியா ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நியைலத்தில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் வேணியம்மாள் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது இருதரப்பினரை சேர்ந்த பெற்றோர், உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
மேலும் சத்தியமூர்த்தியிடம் விசாரித்த போது அவர் நதியாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இதையடுத்து போலீசார், உறவினர்கள் முன்னிலையில் ஆம்பூர் இந்து மேல்நிலைபள்ளி அருகே உள்ள விநாயகர் கோவிலில் நதியாவின் கழுத்தில் சத்தியமூர்த்தி தாலி கட்டினார்.
0 Comment "கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய பெயிண்டர்"
Post a Comment