தி.மு.க. ‘உப்பு சத்யாக்கிரகம்’ செய்யுமா? ‘அம்மா உப்பு’ இன்று ரிலீஸ்!

தமிழகத்தில் அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்ற வரிசையில் இன்று முதல் ரேஷன்கடைகள், கூட்டுறவு அங்காடிகளில் மலிவு விலையில்அம்மா உப்புவிற்பனைக்கு வருகிறது. ‘அம்மா உப்புவிற்பனையை முதல்வர் ஜெயலலிதா இன்று முறைப்படி கோட்டையில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் இப்போது எங்கும் வியாபித்து கொண்டிருக்கிற வார்த்தைஅம்மா’. தாயைத் தவிர பொதுவான இடங்களில் வயதுக்கு மூத்த பெண்களை அம்மா என்றும் அழைப்பது உண்டு. ஆனால், தமிழகத்தில்அம்மாஎன்றால் ஜெயலலிதாவை மட்டுமே குறிக்கும் என்ற நிலை உருவாகிவிடும் வகையில் இருக்கிறது.
தமிழக முதல்வரான பின் .தி.மு..வின் உட்பிரிவாக ஜெயலலிதா பெயரில் பேரவை தொடங்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதாவுக்கு மரியாதை தரும் வகையில்அம்மா பேரவைஎன மாற்றப்பட்டது.
.தி.மு..வில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவருமே ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்க சங்கடப்பட்டுஅம்மாஎன சொல்லத் தொடங்கினர். அதேபோல, ..எஸ். அதிகாரிகளும், சில மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்கூட ஜெயலலிதாவைஅம்மாஎன்றுதான் அழைக்கின்றனர்.
அந்த வகையில் அம்மா என்ற வார்த்தையை இன்னும் அதிகமாக உச்சரிக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
முதன் முதலில் தலைநகரான சென்னையில் மாநகராட்சி சார்பில் குறைந்த விலையில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கமலிவு விலை உணவகம்தொடங்கப்பட்டது. பின்னர் அம்மா உணவகம் என மாற்றப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திறக்க உத்தரவிடப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து 2013 மார்ச் 19-ம் தேதி சென்னைசாந்தோமில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களிடையே இந்த உணவகங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது சென்னையில் மட்டும் 200 உணவகங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு கிராமங்களிலும் அம்மா உணவகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல் ராஜஸ்தானிலும் மலிவு விலையில் உணவகங்கள் திறக்க முடிவு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் முதல்வராக (வசுந்தரா ராஜூ) இருப்பதால் அங்கும் அம்மா உணவகம் என்ற பெயரில் திறக்கப்படலாம்.
இதன் தொடர்ச்சியாகஅம்மா குடிநீர்என்ற பெயரில் பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யப்படுகின்றன. பிற பிராண்டு நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை ரூ.15 முதல் 20 வரை செய்கின்றன. ஆனால், அம்மா குடிநீர் ரூ.10 மட்டுமே. இந்த பாட்டில் குடிநீர் தமிழகத்தில் பஸ் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. உணவகத்தைப் போல குடிநீருக்கும் நல்ல வரவேற்புக் கிட்டியது.
மூன்றவதாக இப்போதுஅம்மா உப்புஎன்ற பெயரில் மூன்று வகைகளில் மலிவு விலை உப்பு விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை விலை முதல் வகை உப்பு ரூ.14க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.22), 2-வது வகை உப்பு ரூ.10-க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.16), 3-வது வகை உப்பு ரூ. 21-க்கும் (வெளி மார்க்கெட் ரூ.25) விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மூன்று வகை உப்புகளை தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் உப்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு முதல் கட்டமாக 100 டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது ரேஷன் கடைகள், அமுதம் சிறப்பங்காடி, சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மற்றும் கூட்டுறவு துறை ரேஷன் கடைகளில் இந்த மலிவு விலை உப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்அம்மா உப்புஇன்று ரிலீஸ் ஆவதையடுத்து, எப்படியும் இது பற்றி தி.மு.. நெகட்டிவ்வாக கருத்து தெரிவிக்கும். கருத்து தெரிவித்தால், ஓகே.. ‘உப்பு சத்யாக்கிரகம்செய்ய மாட்டார்கள்தானே!




0 Comment "தி.மு.க. ‘உப்பு சத்யாக்கிரகம்’ செய்யுமா? ‘அம்மா உப்பு’ இன்று ரிலீஸ்! "

Post a Comment