ஊர்வசி கர்ப்பத்தை கலைக்க சொன்ன விஷயம் வெளியில் கசிந்ததால் நடிகர் கமலஹாசன் அதிர்ச்சியில் உள்ளார். தான் மறைத்து மறைத்து வைத்த விஷயங்களை வெளியிடுவது யார்? என்பதை கண்டுபிடிக்க
முடியாமல் திணறி வருகின்றார் கமலஹாசன்.
அட அதிர்ச்சி அடைய வேண்டாம் விஷயம் இது தானுங்கா….!
விஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பார்வதிமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படத்தில் பல கதாபாத்திரங்கள் உள்ளன. கதை வெளியில் தெரியாமல் ரகசியமாக படமாக்கப்பட்டு வருகின்றது. பழைய, புதிய நடிகர் நடிகைகள் என ஒரு பெரிய பட்டாளமே உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகின்றனர்.
படம் 8ஆம் நூற்றாண்டு, 21ஆம் நூற்றாண்டு என வரலாற்று பின்னணி கொண்ட படமாக உருவாகி வருகின்றது.
கமல்ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஊர்வசி நடிக்கிறார்.
இந்த படத்தில் கமல்ஹாசன் இருவேடங்களில் நடிக்கிறார். 8ஆம் நூற்றாண்டி
கூத்துக்கலைஞராகவும், 21ஆம் நூற்றாண்டி சூப்பர் ஸ்டாராகவும் நடித்து வருகிறார்.
8ஆம் நூற்றாண்டு
கூத்துக்கலைஞராக நடிக்கும் கமல்ஹாசனின் மனைவியாக வரும் ஊர்வசி கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.
கமலஹாசனின் குழந்தையை
கருவில் சுமகின்றார்.
ஆனால் கமலஹாசன் ஊர்வசியின் கர்ப்பத்தை கலைக்க சொல்கின்றார். இது படத்தின் கதை..!
ஆனால் இரண்டாவது திருமணம் செய்து தற்போது உண்மையாகவே
கர்ப்பமாக இருக்கும்
ஊர்வசி, கர்ப்பத்தை
கலைக்கும்படியான காட்சியில் நடிக்க செண்டிமெண்டாக
மறுத்தார். பின்னர் கமல்ஹாசனும், இயக்குனர் ரமேஷ் அரவிந்தும் சமாதானம் செய்து அந்த காட்சியில் ஊர்வசியை நடிக்க வைத்தனர்.
ஊர்வசி நடிக்கும் கதாபாத்திரம்
கதையின் முக்கிய காட்சிகள் ஆகும். ஊர்வசி நடிப்பதை வெளியில் சொல்லாமல்
திரையில் சஸ்பென்சாக
காட்டலாம் என நினைத்துள்ளார் கமல். ஆனால் கூடத்தில் இருக்கும் கருப்பு ஆடு கதையை கசியவிடுவது
மட்டுமல்லாமல் யார்.. யார்.. நடிக்கின்றனர்.,
என்ன காட்சிகளில்
நடிக்கின்றனர் என்பதை அக்குவேர் ஆணிவேராக மீடியாக்களிடம் கூறிவிடுகின்றார். அந்த கருப்பு ஆடு யார், என்பதை கண்டுபிடிக்க
முடியாமல் கமல் திணறி வருகின்றார்.
0 Comment "ஊர்வசியின் கர்ப்பத்தை கலைக்க சொன்ன கமலஹாசன்.!"
Post a Comment