ஆஸ்திரேலிய அணிக்குள் ஆலன் பார்டர் காலத்தில் நுழைந்த அவர் அணி உலககோப்பை வெல்வதை உறுதி செய்கிற வகையில் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்துக்கு எதிராகவும் கலக்கி எடுத்தா ஸ்டீவ் வாக் தன்னுடைய ஆட்டம் தனக்கே புரியவில்லை என்று புலம்பிக்கொண்டு இருந்த ஸ்டீவ் வாக் படிப்படியாக சறுக்கினார். அவரின் சகோதரர் மார்க் வாகிடம் அணியில் இடத்தை இழந்தார். மித வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர் தீராத முதுகுவலியால் அதையும் விடுக்க வேண்டியதாக போயிற்று.
ஸ்டீவ் வாக் அவ்வளவு தான் என்று எல்லாரும் சொன்னார்கள். கனத்த மவுனத்தோடு மீண்டும் களம் புகுந்தார் ஸ்டீவ் வாக். பழைய அதிரடி ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்திருந்தார். கச்சிதமாக ஆட ஆரம்பித்து இருந்தார் அவர். மார்க் டைலருக்கு பின்னர் அணியின் தலைமைப் பொறுப்பு இவர் வசம் வந்தது. அடித்து நொறுக்கி விடுவது என்கிற குணத்தை ஆஸ்திரேலியா அணியிடம் உச்சத்துக்கு கொண்டு சென்றது இவரின் தலைமை. தொடர்ந்து இவர் தலைமையில் பதினைந்து டெஸ்ட் போட்டிகளில் வென்று அசத்தியது ஆஸ்திரேலியா.
உலகத்தின் எல்லா டெஸ்ட் ஆடும் அணிகளுக்கு எதிராகவும் முதன் முதலில் 150 ப்ளஸ் ஸ்கோர் அடித்த வீரர் இவரே.
உலகக்கோப்பை போட்டி 1999 ஆம் வருடம் நடைபெற்றது. ஒவ்வொரு வெற்றிக்கும் தீவிரமாக உழைத்தது அணி. ஸ்டீவ் வாக் பொறுப்போடு அணியை வழி நடத்தினார். அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி ஸ்கோரை சேஸ் செய்யும் வகையில் இறுதி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து டை செய்திருந்த பொழுது ஒரு ரன் அவுட் மூலம் இறுதிப்போட்டிக்குள் பழைய வெற்றிகளின் மூலம் ஆஸ்திரேலியா அணி நுழைந்தது. பாகிஸ்தான் அணியை சந்தித்த ஸ்டீவ் வாக் துவம்சம் செய்கிற வகையில் வழி நடத்தினார். அணி உலக கோப்பையை தூக்கியது.
அதற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக இருந்து செயல்பட்ட அவர் இறுதிப்போட்டியில் எண்பது ரன்கள் அடித்து விடைபெற்றார். அவரின் நூலுக்கு முன்னுரை எழுதச்சொல்லி கேட்டுக்கொண்டது இந்தியாவின் திராவிட் அவர்களைத்தான். கொல்கத்தாவில் டாட்டரஸ் ஆப் லேப்பர்ஸ் அமைப்பின் மூலம் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்துவருகிறார் அவர். அடித்து ஆடும் ஆட்டத்துக்கும், திருப்பி அடிப்பதற்கும் கச்சிதமான எடுத்துக்காட்டான அவரின் பிறந்தநாள் ஜூன் இரண்டு
0 Comment "ஸ்டீவ் வாக் கிரிக்கெட்டில் விடாமல் போராடும் குணத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு"
Post a Comment