ஒரு புதிய திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்றால் ஒன்று டிக்கெட் ரிசர்வ் செய்யவேண்டும், அல்லது தியேட்டருக்கு சென்று கூட்டத்தில் இடித்து பிடித்து டிக்கெட் எடுக்கவேண்டும். ஆனால் கேரளாவில் வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ஒரு திரைப்படத்தை அனைவரும் இலவசமாக டிக்கெட் கட்டணம் இன்றி பார்க்கலாம். இந்த புதிய முறையை 'டெஸ்ட் பேப்பர்' என்ற படத்தை இயக்கிய வினோத்குமார் உலகிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்த இருக்கின்றார்.
விஷயம் இதுதான். இயக்குனர் வினோத்குமார் கேரளாவில் வரும் ஜூன் 13ஆம் தேதி ரிலீஸ்
செய்யக்கூடிய 'டெஸ்ட் பேப்பர் திரைப்படத்தின் இலவச டிக்கெட்டுக்களை குறிப்பிட்ட சில இடங்களிலோ அல்லது தயாரிப்பாளரின் அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம். தியேட்டரில் அன்றைய நாள் எவ்வளவு வசூலாகிறதோ, அந்த முழுப்பணத்தையும் உள்ளூர் விளம்பரதாரர்களிடம் இருந்து தயாரிப்பு நிறுவனம் வசூல் செய்துவிடும். பணம் கொடுத்த விளம்பரதாரர்கள் தங்கள் நிறுவன விளம்பரங்களை படம் ஆரம்பிக்கும் முன்பும், இடைவேளையின்போதும் ஒளிபரப்புவார்கள். இந்த புதிய முயற்சி முதல்கட்டமாக திருவனந்தபுரத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
டெஸ்ட் பேப்பர் இந்த படத்தில் ஜெகதீஷ், நந்து, முன்னா, மகாலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த புதிய முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 Comment "ரிலீஸாகும் புதிய திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம். "
Post a Comment